நல்லாசிரியர் விருது: மதுரையிலிருந்து 13 பேர் தேர்வு!

நல்லாசிரியர் விருது: மதுரையிலிருந்து 13 பேர் தேர்வு!

Published on

தமிழகத்தில் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் .5-ம் தேதி ஆசிரியஎ தின விழாவாகக் கொண்டாடப் படுகிறது. தமிழக அரசு சார்பில் மாநிலத்தின் சிறந்த ஆசிரியர்களுக்கு அன்று நல்லாசிரிரியர் விருது வழங்கப் படுகிறது.

அந்த வகையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் தினவிழாவாக கொண்டாடப்படுகிறதுஇவ்விழாவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகின்றது. 2021-ம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நாளை நடைபெற உள்ளது. இந்த நல்லாசிரியர் விருதுக்கு மதுரை மாவட்டத்திலிருந்து 13 பேர் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கர்ணன், .பூச்சிப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியன், லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் முரளிதரன், எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சரவணன், பொய்கைகரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருள்ராஜ், நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விநாயகமூர்த்தி, மேலூர் தமிழரசி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார், முண்டுவேலம்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை முருகேஸ்வரி,

ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை லதா, திருமங்கலம் மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியை மகேஸ்வரி, மேலப்பொன்னகரம் முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை பரமேஸ்வரி, லட்சுமிபுரம் டிவிஎஸ் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி, தபால்தந்தி நகர் புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மதிவதனன் ஆகிய 13 பேர் இவ்வருடத்துக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com