நீட் சாதனை: சூரஜ், S/O மகாலட்சுமி!

நீட் சாதனை: சூரஜ், S/O மகாலட்சுமி!
Published on

பேட்டி: பிரமோதா.

நீட் தேர்வு என்றாலே..ஒரு வித பயத்துடன் அதனை அணுகுபவர்களிடையேசூரஜ் சற்றே வித்தியாசமானவர்..முயற்சி செய்தால் முடியாது என்பதே கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்து உள்ளார்.

நீட் தேர்வின்இளநிலை தேர்வு எழுதுவதற்கே தலையால் தண்ணீர் குடிக்கும் போது முதுநிலை தேர்வில் அகில இந்திய அளவில் 11-வது ராங்க் வாங்கி அசத்தியுள்ளார்.. சூரஜ்.. அக்மார்க் தமிழர்

இதனை கௌரவிக்கும் வகையில் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் 25 ராங்க் வாங்கியவர்களை அழைத்து விருந்து கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மான்டவியா.

சூரஜ்ஜின் அம்மா மகாலட்சுமி சன் டி.வி செய்தி வாசிப்பாளர்..சட்ட வல்லுநர் என்று பன்முகம் கொண்டவர்! புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சூரஜ்க்கு கல்கி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.

டெல்லியில் அமைச்சருடன் டின்னர் மீட் எப்படி இருந்தது? 

''இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.. என்னை விட என் அம்மாவுக்கு தான் அத்தனை பாராட்டுகளும்..வாழ்த்துகளும் கிடைக்க வேண்டும்.. எல்லா புகழும் அம்மாவுக்கே..'' என்று அடக்கமாக சொல்லிவிட்டு சூரஜ் ஒதுங்கி கொள்ள.. அம்மாவைப் பார்த்தோம்

''என் மகன் வெற்றிக்கு காரணம் வெறி..'' என்று மகாலட்சுமி சொல்லிவிட்டு, சில நிமிடம் சஸ்பென்ஸ் வைத்தார். 

''ஆமாம் வெறியேதான்ஒரு காலத்தில்ரத்தம் பார்த்தாலே பயப்படும் பையன்..இன்று வெற்றிகரமான பல் மருத்துவர். ஒன்றரை வருஷம் தவமாய் தவமிருந்து இன்று இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளான்.  எப்போதோ நடந்திருக்க வேண்டிய தேர்வு இது

கொரோனா காரணமாக நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு..பின்னர் ஒருவழியாக நடத்தி முடித்தார்கள்தேர்வுக்கு பக்காவாக தயார் செய்து மறுநாள் பரிட்சைக்குத் தயாராகும் போது,  முதல் நாள் மாலையில் 'எக்ஸாம் கேன்சல்' என்று மெசேஜ் வரும்மறுபடியும் முதலில் இருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

சக்ஸஸ் பார்முலா..?! 

ஒரு ரூமும்…23 தடித் தடியான புத்தகங்களும்தான் அவனது வாழ்வியலாக இருந்ததுஒன்றரை ஆண்டுகள் சாப்பிடுவதற்காக மட்டும் வெளியே வருவான். மற்றபடி அந்த ரூமே கதி! ரொம்ப டென்ஷன் ஆச்சுன்னா கொஞ்சம் ரிலாக்ஸ். மற்றபடி தேர்வு எழுதி முடித்தபின் 2 நாட்கள் அழுது கொண்டே இருந்தான்..நான் என்னுடைய 100% தரலேவெறும் 90%-தான் எழுதி இருக்கேன்னு ஒரே அழுகை! பரவாயில்லை என்று சமாதானம் செய்தேன்

ரிசல்ட் வந்ததும் எப்படி இருந்தது?

புஷ்பக விமானத்தில்.. வானத்தில் பறந்த மாதிரி ஜில்லுனு இருந்தது. அவன் கஷ்டப்பட்டு தவம் இருந்ததற்கு நல்ல பலன்.

மத்திய அரசிலிருந்து எப்போது அழைப்பு வந்தது?

மூன்று வாரங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா வீட்டில் இருந்து போன் வந்தது.முதலில் நம்பவே இல்லை..Fake அழைப்பாக இருக்கும் என்று கண்டுகொள்ளவே இல்லை.. ஆனால் அவர்கள் விவரிக்கவிவரிக்க தலைகால் புரியவில்லை. (மகாலட்சுமி முகத்தில் சாதித்த பெருமிதம்)

சூரஜ் என்ன சொன்னார்?

'' அம்மா… R U Happy? அவன் கேட்டது இதுதான்!  இதில் பல அர்த்தங்கள் உண்டுஎத்தனையோ போராட்டங்கள்..வாழ்க்கையிலும் சரி..தேர்விலும் சரி..அத்தனையும் ப்பூ என்று ஊதிவிட்டு சாதித்துள்ளான். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்.. அத்தனை சந்தோஷமும் எங்கள் முன்பு.. ஒவ்வொரு நொடியும் அனுபவித்தோம்.

டெல்லி அமைச்சர் வீட்டில் எப்படி எதிர்கொண்டார்கள்?

உடை எப்படி இருக்கணும்னு (Dress code) சொல்லி இருந்தார்கள்.. அமைச்சரின் உதவியாளர்கள்..வாசலுக்கே வந்து அழைத்து சென்றார்கள். என்னை மாதிரி வந்திருந்த அனைவரையும் ஐந்து ஐந்து பேராக ஒரு டேபிளில் அமரவைத்து இருந்தார்கள்.. எல்லோரையும் தனியாக சந்தித்து பேசினார்.. அமைச்சர்.. பொதுவாக அமைச்சகத்தில் இருந்து வாழ்த்து கடிதம் மட்டும் தான் அனுப்புவார்களாம்..ஆனால் இப்போது கொரோனா காலத்தில் தடைகளை தகர்த்து சாதித்து இருப்பதால்..நேரடியாக அழைக்குமாறு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

-சூரஜ் சொல்லி முடிக்க, மகாலட்சுமி தொடர்ந்தார்..

இது எங்கள் கனவு.. லட்சியம்.. வேட்கை..எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்..அதனை அசால்ட்டாக நிறைவேற்றி காட்டியுள்ளான் மை டியர் சன்.

சினிமாவில் 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தில் நதியா சொல்வார்..எனக்கு ஒரு மகன் இருக்கான்டா..சிங்கம் மாதிரி என்று சொல்வார்..அதைத்தான் நானும் கம்பீரமாக சொல்கிறேன்.. எனக்கு ஒரு மகன் இருக்கான்!

நீட் எழுதும் மாணவர்களுக்கு அட்வைஸ்?

முதலில் நீட் தேர்வு குறித்த அச்சத்தை நீக்குங்கள்.அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் கிடையாது.. கண்டிப்பாக அதிக மார்க் கிடைக்கும் என்ற மனநிலையோடு தேர்வுக்கு செல்லுங்கள்.. Positive vibes வுடன் செல்லுங்கள்நீட் என்னநீட்டின் தாத்தா பாட்டி வநதால் கூட நன்றாக ஸ்கோர் செய்யலாம்..

தன்னம்பிக்கை தெரிக்க சொன்ன சூரஜூக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடை பெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com