பிரதமர் கையால் ஷொட்டு வாங்கினேன்!

பிரதமர் கையால் ஷொட்டு வாங்கினேன்!
Published on

பேட்டி: ஜிக்கன்னு.

மிழகத்திற்கு..வரும். வட நாட்டு தலைவர்களுக்கு..மொழி பெயர்ப்பாளர்களை நியமிப்பதில் தாவு தீர்ந்து விடும். அதிலும் பிரதமர் மோடி போன்றவர்கள் கணீரென்று காத்திரமாகப் பேசும்போது, அதற்கு ஈடான குரலில் அழுத்தம் திருத்தமாகப் பேசி கருத்துக்களை முன்வைத்துப் பேசி பார்வையாளர்களை ஈர்ப்பது சாதாரணமான விஷயமில்லை. 

தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை சரியாக உணர்ந்து அவர்கள் பாணியில் மக்களுக்கு சொல்வது அசாத்தியமான கலை! 

அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழகத்துக்கான பல நலதிட்டங்களை அறிவித்துவிட்டுப் பேசியப்போது, அவருக்கு இணையாக பிரதமரின் பேச்சை அதே அழுத்தம் திருத்தமாகப் பேசி 'அட.. யார் இவர்?" என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் திரு. சுதர்சன்.

சென்னை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி அமைப்பாளராக பணியாற்றும்  திரு. சுதர்சன் அண்மைக்காலமாக..பிரதமர் மோடிஉள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வரும்போது அவர்களின் பேச்சை அச்சு அசலாக அதே பாணியில் மொழிபெயர்த்துப் பேசி அப்ளாஸ்களை அள்ளி குவித்துள்ளார்.

கல்கி ஆன்லைனுக்காக  சுதர்சனை பிரத்தியேகமாக சந்தித்துப் பேசினோம்..

கடந்த முறை இவரது மொழிபெயர்ப்பை பார்த்து வியந்து போன பிரதமர் மோடி, சுதர்சன்  முதுகில் தட்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அதைப் பற்றிக் கேட்டோம்..கலகலவென சிரித்தபடி  மலரும் நினைவுகளுடன் சொல்ல ஆரம்பித்தார்..

''பிரமரின் அந்த செல்ல ஷொட்டு மறக்கவே முடியாது'' என்று தொடர்ந்தார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில்.. தமிழக திட்டங்களை பிரதமர் மோடி அர்ப்பணித்து உரையாற்றும் விழா நடந்தது.அதில் பிரதமரின் பேச்சை அப்படியே உள்வாங்கிஅவர் என்ன சொல்ல நினைத்தாரோ..அதை அதே மாடுலேஷனில் மொழிபெயர்த்தேன்..அந்த பேச்சை மோடியும் நன்கு கவனித்துள்ளார் என்பதும் அதற்கு மக்களின் வரவேற்பையும் உணர்ந்துள்ளார்.

இதையடுத்து அந்நிகழ்ச்சி முடிந்து..ஒரு அறைக்கு சென்று அங்கு சிலரை சந்தித்து பேசி கொண்டு இருந்தார்.. நான் அறைக்கு வெளியே ஆளுநருடன் பேசி கொண்டு இருந்தேன்.. அப்போது அந்த அறையை விட்டு வெளியே பிரதமர், என்னை கவனித்துவிட்டு அருகே வந்தார். நானே எதிர்பாராத வகையில் தனது இரண்டு கைகளாலும் என்னை ஒரு தட்டு தட்டினார்..ஆஹா.. அப்போது அவரின் அன்பை புரிந்து கொண்டேன். இன்னமும் அந்த ஸ்பரிசம் அப்படியே மனதில் உள்ளது. 

பிரதமரின் பேச்சை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

அதற்கு தமிழக அரசு அதிகாரிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு தமிழ்.. ஆங்கிலம், ஹிந்தி என்று  மூன்று மொழிகளும் சரளமாக வரும் என்பதை தெரிந்து கொண்ட தமிழக அரசு அதிகாரிகள், இந்த விழாவில் பிரதமர் மோடியின் இந்திப் பேச்சை தமிழில் மொழிபெயர்க்க  அழைப்பு விடுத்தனர்.. இந்த அரிய வாய்ப்பை நானும் ஏற்று கொண்டேன்.

உங்கள் மொழிபெயர்ப்பு திறமை அவர்களுக்கு எப்படி தெரிய வந்தது?

 பிரதமர் ரேடியோவில் இளைஞர்களுக்காக 'மன் கீ பாத் நிகழ்ச்சி'யில் உரையாற்றுகிறார் இல்லையா? அந்நிகழ்ச்சியை தமிழில் கொடுப்பது நான்தான்.. அந்த நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து என் குரல்தான் தமிழில் 'எனதருமை நாட்டு மக்களே..' என்று பிரதமர் மோடியின் குரலாக தமிழகத்தில் அத்தனை வீட்டிலும் எதிரொலித்துள்ளது.

பின்னர் அந்த 'மன் கீ பாத்' நிகழ்ச்சி ..கேட்டு, மத்திய உள்துறை அமைச்சர். அமித்ஷாவுக்கு மொழிபெயர்க்கச் சொன்னார்கள்..அவருக்கும் எனது மொழிபெயர்ப்பு பிடித்து விட்டது..அதன் பிறகு இரு தலைவர்களும்.. தமிழகம் வரும் போதெல்லாம் மொழிபெயர்க்க எனக்கு அழைப்பு வந்து விடும். இதுவரை சென்னை.. கோவை என்று எல்லா இடங்களிலும் இந்த தலைவர்களின் பேச்சை மொழி பெயர்த்துள்ளேன்.

'மன் கீ பாத்' அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?

அது வேற லெவல் புரொகிராம். என்னைப் பாராட்டி நிறைய கடிதங்கள் வரும்.. ஒருமுறை நிகழ்ச்சி முடித்துவிட்டு வீட்டுக்கு போகும்போது நடு இரவு ஆகிவிட்டது.. இடையில் வழிமறித்து போலீசார் விசாரித்த போது இந்நிகழ்ச்சி குறித்து கூறினேன்.. அவர் நம்புவது போல தெரியவில்லை .சரி.என்று.. 'எனதருமை நாட்டு மக்களே'  என்று வாய்ஸ் கொடுத்தேன்.. அவ்வளவுதான்.. அடுத்த நிமிடம் அந்த போலீஸ்காரர் சல்யூட் அடித்து வழிவிட்டார..இப்படி நிறைய அனுபவங்கள்

ஆல் இந்தியா ரேடியோவில் நிகழ்ச்சி அமைப்பாளராக உங்கள் அனுபவங்கள்? 

நிறைய இருக்கு..இந்தியாவில் 2004-ல் சுனாமியின்போது.. அந்தமானில் பணியாற்றினேன்..அப்போது அனைத்து வானொலி நிலையங்களையும் ஒருங்கிணைத்து.மீட்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டது மறக்கவே முடியாது.

நீங்கள் நாடக நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் என்று கேள்வி பட்டோம்..?

நாடக நடிகர் மட்டுமல்ல.. நிறைய நாடகங்கள் தயாரித்த அனுவமும் உண்டு. பிரதமர் மோடியின் வீடியோக்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளேன்.. அதேபோல அந்தமானில் பணியாற்றியபோது தினமும் ஒரு திருக்குறள் கூறி.. இந்தி மொழியில் அதனை மொழி பெயர்த்து வழங்கியது நல்ல வரவேற்பை பெற்றது.

எனது இத்தனை பெருமைக்கும்..காரணம்.. அகில இந்திய வானொலி தான்..அங்குதான் 34 ஆண்டுகள்ணி!  நேற்று தான் பணியில் சேர்ந்தது போல இருக்கிறது.. எனக்கென்று தனி களம் அமைத்து கொடுத்து என்னை ஊக்கப்படுத்தி அழகு பார்த்த ஆல் இண்டியா ரேடியோவுக்கு..என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்றுதெரியவில்லை. மேலும் என்னை எப்போதும் வழி நடத்தும் துர்க்கை சித்தர்..பெற்றோர்.. குல தெய்வம் அழகர் ஆகியோர்தான் இந்த வெற்றிகளுக்குக் காரணம். 

மனம் நெகிழ்ந்து பேசிய திரு. சுதர்சனை மேலும் தொந்தரவு செய்ய விரும்பாமல் விடை பெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com