மதுரை மக்களை மகிழ்விக்க வருகிறது வந்தே பாரத் - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்
Published on

மதுரை - பெங்களூர் மற்றும் சென்னை - நாகர்கோவில் வரை செல்லும் அதி விரைவு ரயிலான புதிய வந்தே பாரத் ரயில் சேவை, வருகின்ற 20 -ம் தேதி அன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட உள்ளது.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதி விரைவு ரயிலான வந்தே பாரத் ரயில் பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில் தவிர, மேலப்பாளையம்- திருநெல்வேலி, ஆரல்வாய்மொழி-நாகர்கோவில், நாகர்கோவில் டவுன், ஜங்ஷன்- கன்னியாகுமரி என புதிய இரட்டை ரயில் பாதையும் விரைவில் இயங்க உள்ளது.

இதில் மதுரை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய வந்தே பாரத் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வருகின்ற 20 -ம் தேதி அன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்:
மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி - அரசு வெளியிட்ட செய்தி அறிக்கை!
வந்தே பாரத் ரயில்

இவ்வாறு தொடங்கப்படும்  புதிய வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி பயணிகளும் விரைவாக பெங்களூரு செல்ல இயலும். மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல இருக்கும் ரயில் பயணிகள் காத்திருப்புப் பட்டியல் 400-க்கும்  மேல் உயர்ந்து கொண்டே வருகிறது. வந்தே பாரத் ரயில், பயணிகளுக்கு நல்ல வசதியான முறையில் அமையும் எனவும் மதுரை, பெங்களூருவுக்கு இடையே வர்த்தக, தொழில் தொடர்பு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com