மூதாட்டிக்கு காலணி: போக்குவரத்து காவலரின் செயலுக்கு குவியும் பாராட்டு!

மூதாட்டிக்கு காலணி: போக்குவரத்து காவலரின் செயலுக்கு குவியும் பாராட்டு!
Published on

சென்னை சோழிங்கநல்லூர் அக்கரை சந்திப்பு சிக்னலில் போக்குவரத்து காவலராக பணிபுரிபவர் ஜான்சன் புரூஸ் லீ. கடந்த செவ்வாயன்று (மார்ச் 29) அன்று நண்பகலில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்

அப்போது சுமார் 80 வயது மிக்க மூதாட்டி ஒருவர் கொளுத்தும் வெயிலில் கால்களில் செருப்புகூட அணியாமல் சிரமப்பட்டு நடந்து வந்து, அங்கிருந்த பஸ் ஸ்டாப் அருகே இளைப்பாற அமர்ந்தார். இதைக் கண்ட போக்குவரத்துக் காவலர் புரூஸ் லீ, அவரிடம் சென்று 20 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

அதற்கு அந்த மூதாட்டி ''வெயில் அதிகமாக உள்ளது. கால் சுடுகிறது.. நடக்கவே முடியவில்லை"" என்று கூறியுள்ளார். உடனே காவலர் வேறொருவரை அனுப்பி மூதாட்டிக்கு காலணி வாங்கி வரச் செய்து அவருக்கு அணிவித்து அனுப்பி வைத்தார். மூதாட்டி நன்றியுடன் கைகூப்பி வணங்கிச் சென்றார்.

''எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள். இங்குள்ள இரண்டு சிக்னலில் தான் இருப்பேன்'' என மூதாட்டியிடம் போலீசார் கூறியுள்ளார்.

இந்த செய்தியை தாம்பரம்  காவல் ஆணையர் முனைவர் மு.ரவி அறிந்து இன்று சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம்  காவல் ஆணையர் அலுவலகத்துக்கு காவலர் ப்ரூஸ் லீயை வரச் செய்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com