மேற்கு வங்க சட்டப்பேரவை: எம்.எல்.ஏ-க்கள் பயங்கர கைகலப்பு!

மேற்கு வங்க சட்டப்பேரவை: எம்.எல்.ஏ-க்கள் பயங்கர கைகலப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

மேற்கு வங்கத்தில் இன்று சட்டப்பேரவை கூடியபோது, அம்மாநிலத்தில் 8 பேர் எரித்து கொள்ளப்பட்டது தொடர்பான விவாதத்தில் பாஜக – திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு இடையே பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவின் மூக்கு உடைந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் ராம்புர்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த பாது ஷேக். என்கிற திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இவரது கண்டனம் தெரிவித்து கடந்த 22-ம் தேதி நடந்த போராட்டத்தில், அங்குள்ள குடிசை வீடுகளுக்கு சிலர் தீ வைத்தனர். இதில் 5 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று மேற்கு வங்க சட்டப்பேரவை கூடியதும், இந்த 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காததால் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பாஜக – திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் திரிணமூல் எம்எல்ஏ ஆசித் மஜும்தாரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com