நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் நியமனம்!

நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் நியமனம்!

துபாயில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து நியூசிலாந்துடன் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் அறிவிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவல்:

நியூஸிலாந்துக்கு எதிரான டி-20 தொடரின் முதல் போட்டி வருகிற 17-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலிக்கு இந்த தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஜடேஜா, பும்ரா, ஷமி உள்ளிட்டவர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் விவரம் கீழ் வருமாறு:

ரோகித் சர்மா(கேப்டன்),கே.எல்.ராகுல்(துணை கேப்டன்),இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர்,ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சாஹல்,புவனேஸ்வர் குமார்,ஹர்சல் பட்டேல்,அவேஸ் கான், தீபக் சாஹர், முகமது சிராஜ்,அக்சர் பட்டேல்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தியநியூசிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி 17-ம் தேதி ஜெய்ப்பூரிலும், 2-வது போட்டி 19-ம் தேதி ராஞ்சியிலும், 3-வது போட்டி 21-ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

இவ்வாறு இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com