நோபல் பரிசு வென்ற தலைவர் டெஸ்மாண்ட் டுட்டு மறைவு: உலகத்தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி!

நோபல் பரிசு வென்ற தலைவர் டெஸ்மாண்ட் டுட்டு மறைவு: உலகத்தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி!

தென்னாப்ரிக்காவில் நிற வெறிக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளரும், பேராயருமான டெஸ்மண்ட் டுட்டு ‌‌‌‌‌ நேற்று (டிசம்பர் 26) காலமானார். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க தலைவரான டெஸ்மாண்ட் டுட்டூவின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து ராணி எலிசபெத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் வசித்து வந்த டெஸ்மாண்ட் டுட்டூ, தென்னாப்ரிக்காவில் இனவெறிக்கு எதிராகவும், ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துள்ளார். அவரது சேவைகளை பாராட்டி 1984-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் 90 வயதான டுட்டூ புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த டுட்டூ, வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் வைக்கப்பட்டுள்ள டுட்டுவின் உடலுக்கு ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com