0,00 INR

No products in the cart.

போராடி அலையும் யானைகளின் கதை

சரஸ்வதி காயத்திரி (வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு)

வலசை

ச்சுக்கு வருவதற்கு முன்பே விருது பெற்றிருக்கும் சு.வேணுகோபாலின் இரண்டாவது நாவல் என்ற சிறப்பும் இதற்கு உண்டு

ரு விவசாயியாக , இந்த நிஜ உலகைப் பற்றிய நுட்பமான, விரிவான பார்வையை , கயமைகள் பெருகிப்போனாலும் எங்கிருந்தாவது ஒரு நீள் கரம் அந்தக் கயமையில் சிக்கியவர்களை மீட்கும் என்கிற நேர்மறை சிந்தனையை வழங்கும் என்பதை கதையின் இறுதியில் சொல்ல மறப்பதில்லை எழுத்தாளர் சு.வே.

அதனாலேயே மற்ற சூழலியல் எழுத்தாளர்களிடமிருந்து தனித்து நிற்கிறார். மனிதனின் நாகரிகப்போக்கால், ஆதிக்க மனப்பான்மையால் இந்த நிலம் கூறுபோடப்படுவதை, சிதைக்கப்படுவதை, அங்கு வாழும் மக்கள் துரத்தப்படுவதை பதிவு செய்கிறவர்களின் எழுத்தில் ஒரு ‘புரட்சி போராளி’ பாவனை இருக்கும் நடப்பவை எல்லாம் அநீதிதான்., களைந்தெறிய., புத்தகத்தைப் படித்து முடித்தவுடனே பதாகை தூக்கி சாலைக்கு அனுப்பும் குரல்களிடையே சு.வேணுகோபால் தன் வயதைவிட அதிகமான முதிர்ச்சியோடு  நடந்தவைகளைப் பற்றிய பார்வையை விவரிக்கும்போது உண்மை நிலையை உணர முடிகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் யானைகளின் வழித்தடம், விவசாயம், கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக்கொண்டே வருவதால் தங்கள் உணவுக்கும், தாகத்திற்கும் போராடி அலையும் யானைகளின் கதை.

அது மட்டுமா என்றால், இல்லை.

* விவசாயியின் சொந்த வாழ்க்கை
* மலைவாழ் மக்கள் – விவசாயிகள் நட்புறவு
* மலைவாழ்மக்களான ‘ முதுவர்களின் ‘ வாழ்க்கை முறை
* யானைகளின்  போராட்டம் அப்போராட்டத்தால் பாதிக்கப்படும் விவசாய       நிலங்கள்; விவசாயிகள்.
* காட்டு யானைகளை விரட்ட வரும் கும்கி யானை சலீம் அதன் கதை என       வலசையினுள் பல்வேறு குறுங்கதைகள்.

சு.வே.வின் கதை சொல்லும் பாணி சற்றே முன்னும் பின்னும், தன் குரல், யானையின் குரல், கும்கிக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரின் குரல் என மாற்றி மாற்றி வந்தாலும் அத்தனை குரல்களையும் கேட்க முடிகிறது     தங்குதடையில்லாமல்.

வண்டுக்கடிபோல் ஆரம்பித்து கடும் அவதிக்குள்ளாகும்
கதை நாயகன் தன் சிறு வயதில் மலைவாழ் மக்களான முதுவர்களிடம்
அழைத்துச்செல்லப்பட்டு அங்கே முதியவரான சாமன முதுவரிடம்   ஒரு மண்டலம் தங்கியிருந்து வைத்தியம் செய்து கொள்ளும் காலத்தில் நம் தமிழ் சங்கப்பாடல்களிலும் குற்றாலக்குறவஞ்சியிலும் இடம்பெறும் காட்சிகளை படித்தது போன்ற அனுபவம் ஏற்படுகிறது.
அந்தக் குழந்தைகளோடு கதைசொல்லியான சிறுவனும் காட்டில் ஊடாடுவதும், சந்திக்கும் இன்னல்களும், ஆச்சர்யம் கொள்ளத்தக்க வகையில் அமையும் காட்டின் அற்புதங்களும் தோழி குந்தலி காட்டும் பரிவும். அருமை.

கதையின் நீளம் இதனால் அதிகரிக்கிறது என்பது இங்கே குறையாகவும் , சு.வே.வின் எழுத்தை விரும்புபவர்கள்,  ‘அப்படியெல்லாம் இல்லை, நல்லாதான் இருக்கு’ என்று சொல்லத்தக்க வகையிலும் அமைந்திருக்கிறது.

தனித்த ஆண்களின் பெயர் ‘அல்லியன் ‘ என்று சொல்லிக் கொடுக்கும் குந்தலி, பின்னாளில் ‘இயேசு  அழைக்கிறார் ‘  சபை வேன்களின் போக்குவரத்து தொடங்கியவுடன் ‘ கிறிஸ்டினா’வாக மாறிப்போகிற அவலம் சொல்லில் அடங்காதது.

ஒவ்வொரு புல்லிலும் ஒவ்வொரு செடியிலும் ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு மொட்டிலும் ஒவ்வொரு கொத்திலும் வசந்தத்தைக் கொண்டுவர மேவுகிறது குளிர்காற்று. பூக்கும் காடு எதையும் மூடி மறைக்காது பேரெழிலோடு தன்னைத் திறந்து தருகிற அம்மணம் வன தேவதைகளின் பேருவுகை.

ஆழ்ந்த அமைதியிலும் இசைக்குரல் வராத இடமில்லை. பள்ளத்தாக்கில் ஓடும் நதியிலிருந்து,சிற்றோடையிலிருந்து அருவியிலிருந்து உடலைத்திருப்ப முடியாமல் திருப்பி அசையும் மரத்திலிருந்து கனி விழும் கிளையிலிருந்து முறிந்து விழும் கொப்பிலிருந்து காடமர் செல்வி குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறாள் இசையை.பரிபாஷைகள் புரிந்து நகர்கின்றன ஜீவன்கள். எப்போதும் காட்டுடன் விலங்குகள் பேசிக்கொண்டேதான் நகர்கின்றன.

யானைகளை விரட்ட வரும் கும்கி சலீம் கன்று ஈன்றிருக்கும் யானைக்காக, மற்ற யானைகளையும் தொந்தரவு செய்யாமல் நகர்ந்து வந்துவிடுகிற
‘அறம்’ மனிதர்களுக்கு துளியளவு இருந்தால் போதும், இந்த பூமியை எதுவரினும் காப்பாற்றி விடலாம் .

‘வலசை’ எவ்வழியிலாவது இன்றைய இளந் தலைமுறைக்குக்
கொண்டு சேர்க்கப்பட வேண்டிய புத்தகம் .
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டாலோ அல்லது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கமலஹாஸன் போன்ற பிரபலங்கள் பரிந்துரைத்தாலோதான் சென்று சேரும்.
‘Discovery Channel’, ‘History Channel’ களிலும் மட்டுமே இன்றைய குழந்தைகள் தெரிந்து கொள்வதைவிட அதிகமாய், விலங்குகளை, நிலத்தில் துளிர்க்கும் ஒவ்வொரு தாவரத்தையும் , அந்நிலத்தை வருடும்  காற்றும் மழையும் சொல்லும் சேதிகளையும் தெரிந்து வைத்திருக்கிற சு.வேணுகோபாலிடம் தெரிந்துக்கொள்ள முடியும். அதற்கு முதலில் ‘ வலசை ‘ கவனம் பெற வேண்டும்.

எழுத்து மற்றும் கணையாழி இணைந்து நடத்திய போட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50,000/- பரிசு பெற்ற நாவல்.

 

தவற விடக்கூடாத புத்தகம்.
நாமும் நம் தலைமுறையும் இயற்கைக்கு செய்த பாவத்திற்கு இப்படியாகவாவது பரிகாரம் தேடலாம்.

வலசை

சு.வேணுகோபால்
தமிழினி
விலை: ரூ.160/-

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

செல்சாரைத் தேடிய ரா.கி.ரா

1
சுஜாதா தேசிகன்                                             ...

உங்கள் குரல்

1
தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்துள்ள  தமிழக அரசை பாராட்டி, ’அந்தப் பணியை செம்மையாக நிறைவேற்றிய செவிலியர்கள்/மருத்துவர்கள் கடவுளின் தூதர்களாகப் பார்க்கப்படுவார்கள். அவர்களை மனதார பாராட்டி நன்றி சொல்லி பெருமிதம் கொள்வோம்’  என்ற கல்கியின்...

விமானத்தின் வேகத்தில் ரயில் பயணம் !

0
இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் சந்திப்பு:  ராசி பாஸ்கர் “சக்கரத்திற்கும் சாலைக்கும் உள்ள உராய்வும், காற்றினால் ஏற்படும் உராய்வும், நாம் வேகமாகச் செல்வதற்குத் தடையாக இருப்பதோடு அதிக ஆற்றல் செலவினத்தை உருவாக்குகிறது. இந்த இடையூறுகளிலிருந்து விடுபட்டு வேகமாகப்...

காதலுக்கு மரியாதை

0
ஹர்ஷா தன் காதலுக்காக நாட்டின்  மன்னராகும் வாய்ப்பை தியாகம் செய்து முடி துறந்து சரித்திரத்தில் இடம் பெற்ற இளவரசர்களை நாம் அறிவோம். கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து அரச குடும்பத்தில் கூட நிகழ்ந்திருக்கிறது,  பிரிட்டனின்...

 பொலிடிகல் பிட்ஸா

0
 கௌதம் ராம் வீரிட்டு எழும் வருண் காந்தி ஆளும் பா.ஜ.க. தரப்பில் பொதுவாக காந்தியை உயர்த்திப் பிடித்தாலும், அவர்களுக்குள்ளே ஒரு கூட்டம் காந்தியை அவமதிப்பதும், கோட்சே துதி பாடுவதுமாக இருக்கிறார்கள். வழக்கம்போல, இந்த வருட காந்தி...