ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 79: பசுமைப் பண்ணைக் கடைகளுக்கு அமோக வரவேற்பு!

ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 79: பசுமைப் பண்ணைக் கடைகளுக்கு அமோக வரவேற்பு!

தமிழகத்தில் சமீபகாலமாக தக்காளி ஒரு கிலோ 150 ரூபாயாக விற்கப்படும் நிலையில், தமிழக கூட்டுறவுத்துறையின்கீழ்செயல்படும் பசுமைப் பண்ணைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 79-க்கு விற்கப்படுகிறது. இதனால் இக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதுகுறித்து தமிழக கூட்டுறவுத்துறை சார்பாக தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கனமழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து காய்கறி வரத்தும் குறிந்துள்ளதால், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பசுமைப் பண்ணை காய்கறிக் கடைகள் மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்தது.

இந்நிலையில் இன்று முதல் அனைத்து ஊர்களிலும் பசுமைப் பண்ணைக் கடைகளில் தக்காளி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் மலிவு விலையில் விற்பனை செய்யப் படுகிறது.வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 160-க்கு விற்கப்படும் நிலையில், இங்கு கிலோ 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு நாளொன்றுக்கு 15 டன் தக்காளி கொள்முதல் செய்கிறது. மேலும் தேவைப்பட்டால் கொள்முதல் அதிகரிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com