0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

முகநூலில் ஒரு வீடியோ பார்த்தேன் வாசகீஸ்… அந்தப் பெண் அழகுதான்! பார்த்த கண்கள் அனைத்துமே ஒப்புக்கொள்ளக்கூடிய ஒயிலான வடிவம்தான். ஆனால், அதை வெளிப்படுத்திய விதம் கண்ணுல தூசி விழுந்த மாதிரி உறுத்திவிட்டது.

அது ஒரு கல்யாண மண்டபம்… பிரதான ஹாலில் வைக்கப்பட்டிருக்கும் ராட்சச மின் விசிறியைக் கடக்கிறாள் ஓர் அழகான யுவதி. திடீரென்று முகத்தில் வீசிய காற்றில் தலைமுடி கலைந்து அலைகிறது. அதை ஸ்டைலாக ஒதுக்கிக் கொண்டவள், யாருக்கோ கண்ணால் சமிக்ஞை காட்டுகிறாள். காமிரா இன்னும் டைட்-க்ளோஸ் அப் ஆகிறது. இப்போது ஃபேன் காற்றில் உடல் முழுவதும் படும்படி நிற்கிறாள். சில விநாடிகள்தான்… ‘டப்’ என்று மெல்லிய மேலாடை முழுவதும் விலகி, முன்னழகு அப்பட்டமாய்த் தெரிகிறது. அந்தப் பெண் சிறிதும் கூச்சமோ, படபடப்போ இல்லாமல் மிகவும் காஷுவலாக போஸ் தருகிறாள். நினைத்த காரியம் முடிந்த திருப்தி அவளது முகத்தில்…

இது மாதிரியான ‘செட் அப்’ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஏராளமாகக் கிடக்கின்றன. இதில் தோன்றும் பெண்களின் நோக்கம்தான் என்ன? யாரைத் திருப்திப்படுத்த? அல்லது யாரை வெறுப்பேற்ற?

***

முகம்மது அலியை நீங்கள் அறிவீர்கள். மறைந்த பிரபல குத்துச் சண்டை வீரர். இவரது மகள்கள் ஹன்னாவும் லைலாவும் தமது தந்தையாரைப் பார்க்கச் சென்றிருந்தபோது, மேற்கத்திய உடைகள் அணிந்திருந்தனராம். அவை உடலை வெளிப்படுத்தும் விதமாக இருக்கவே, பெண்களை அருகே அமர்த்திக்கொண்டு வாஞ்சையோடு சொன்னாராம்,

‘‘என் அன்பு மகள்களே… இந்த உலகில் அதிக மதிப்பு மிக்கவையாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாக, மேலும் பெறுவதற்கு மிகக் கடினமானவையாகவும் உள்ளன. வைரம் பூமியின் ஆழமானப் பகுதியில் மறைந்துள்ளது. முத்து, ஆழ்கடலில் சிப்பியில் பாதுகாப்பாக உள்ளது. தங்கம், சுரங்கத்துக்குள்ளே அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்டுள்ளது. இவற்றை எடுக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

மாடல்

அதேபோல, பெண்ணின் உடலும் புனிதமானது. தங்கம், முத்து, வைரத்தைவிட உயர்வானது. உன் உடலை நீ முறையாக மறைத்துக்கொள்ள வேண்டும்” என்று அறிவுரை சொன்னராம்!

உண்மைதானே கண்மணீஸ்?
நாகரிகமாக ஆடை அணிவதில் தவறேதுமில்லை. ஆனால், அது கண்ணியமாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் இல்லையா?
‘முற்போக்கு’ என்பது ஆடை விலகலில் இல்லை. ‘பெண்’ என்பவள் வெறும் காட்சிப் பொருள் அல்ல! அவள் அரசாட்சிப் பொருள் என்று இளம் யுவதிகளுக்குப் புரிய வைக்கணும்னா, நமது ஆடைகளும் கண்ணியமாக இருக்கணும் டியர்ஸ்…
பொக்கிஷங்கள் நிறைந்த வீட்டைத் திறந்துபோட்டால், என்ன ஆகும்னு நமக்குத் தெரியாதா என்ன?

2 COMMENTS

 1. நாணலிலே கால் எடுத்து நடந்து வந்த பெண்மை இது!
  நாணமெனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது!
  கவியரசர் வரிகள் போதுமே பெண்மை சிறப்பை போற்ற!
  திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

 2. விலைமதிப்பில்லா தங்கம்,முத்து,வைரம் ஆகியவற்றை பட்டியலிட்டு மங்கையும் அதில் இளமை யுவதிகள் மதிப்பு அளவில் அடங்காது என்று பெ ருமைப் படுத்திய “ஒரு வார்த்தை” யில் மங்கையர் மலர் சிறப்பு
  ே பாற்றுதற்குரியது.
  து.சேர ன்
  ஆலங்குளம்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

நான் படிச்ச காலத்துல, ஸ்கூல்ல, பசங்க எல்லாம் பேப்பர் ஏரோப்ளேன் செஞ்சு ‘சொய்ங்... சொய்ங்’னு பறக்கவிட்டு, விளையாடுவாங்க... அது கேர்ள்ஸ் பக்கமா வந்து விழுந்தா, எடுத்து டேபிள் மேல வெச்சுடுவோம். நாம்பளும் அதைத்...

ஒருவார்த்தை!

சில சமயங்கள்ல, தமிழ் சினிமாவை மிஞ்சும்படியான சம்பவங்கள் நடக்கிறப்போ, அதை உங்களோட பகிர்ந்துக்கத் தோணுது நட்புகளே! அது ஒரு ரொம்பவே நடுத்தரக் குடும்பம். கணவன் – மனைவி இரண்டு பேருமே கஷ்டப்பட்டு இன்னிக்கு ஒரு...

ஒரு வார்த்தை!

இந்த வார ‘ஒரு வார்த்தை’க்கு சிந்தனை வித்திட்ட ஆர்யா ராஜேந்திரன் மற்றும் ராஜராஜேஸ்வரிக்கு நன்றி.... ஒருவர் கோபத்தில்... அடுத்தவர் ஆபத்தில்...! திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யாவைப் பற்றி நமக்குத் தெரியும். 22 வயதான இவர்,...

ஒரு வார்த்தை!

பெங்களூருவின் பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி மிகவும் பிரபலமானது மட்டுமல்ல; பாரம்பரியமானதும் கூட! ஒழுக்கம் மற்றும் கல்விக்குப் பெயர் போனது. வசதியான, பிரமுகர்களின் செல்லப் பிள்ளைகளுக்குத்தான் பெரும்பாலும் அட்மிஷன் கிடைக்கும். அந்தப் பள்ளி, ஸாரி......

ஒரு வார்த்தை!

எட்டு ஆண்டுகளாக ஏங்கித் தவித்துப் பிறந்த குழந்தை அவள்! ப்ரீத்திக்கு மூன்று வயசாக இருக்கும்போது, அவளது அப்பா ஸ்ரீநிவாசன், அவளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட, தானே முயன்று நீந்தி மேலே வந்ததோடு, பயமில்லாமல்...