spot_img
0,00 INR

No products in the cart.

ஒற்றை செங்கலை வைத்து மக்களை ஏமாற்றினார்கள்: பிஜேபி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!

பிரதமரை நீங்கள் திரும்பிப்போ என்று கூறினாலும் அந்த திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது.

தமிழகத்தில் வெற்று அரசியலுக்காக ஒற்றை செங்கலை காட்டி மக்களை ஏமாற்றினார்கள். ஆனால், பிரதமரை நீங்கள் ‘’திரும்பிப்போ’’ என்று கூறினாலும், அவரால்தான் ரூ. 2000 கோடி முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது என்று பிஜேபி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை செல்வதற்காக வானதி சீனிவாசன் மதுரை விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்திற்குரிய திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்க வருகிறபோது அதை தமிழகத்தின் சார்பாக அனைவரும் வரவேற்க வேண்டும். கடந்த காலத்தில் திமுகவினர் ஆயுத தளவாட கண்காட்சியை திறந்து வைக்க பிரதமர் வரும்போது ‘’கோ பேக்மோடி’’ என கூறினர். ஆனால், அந்த திட்டத்தின் மூலமாக 2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். பிரதமரை நீங்கள் திரும்பிப் போ என்று கூறினாலும் கூட அந்த திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தொடர்ச்சியாக ஜப்பான் நிதி உதவி கிடைத்தால்தான் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஜப்பானில் இருந்து ஒரு குழு இங்கு வந்து ஆய்வு கொள்வதற்கு தாமதமாகிறது. இது தெரிந்திருந்தும் எய்ம்ஸை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை கையில் வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். சரி.. நான் கேட்கிறேன்.. இவர்கள் எய்ம்ஸ் கட்டுமான பணியை துவக்கி விட்டார்களா? ஆட்சிக்கு வந்து 7 மாத காலமாகியும் இன்னும் ஒற்றை செங்கலை கையில் வைத்துகொண்டு ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் அரசியலுக்காக ஒற்றை செங்கலை வைத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,140SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

தொல்லியல்துறை அறிஞர் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!

0
தமிழகத்தின் முதுபெரும் தொல்லியல் துறை அறிஞர் நாகசாமி மறைவு தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனரும் முதுபெரும் தொல்லியல்...

திருப்பதிக்கு பாதயாத்திரை: 300-க்கும் அதிக தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால் தர்ணா!

0
திருமலை திருப்பதி கோவிலுக்கு வேலூரிலிருந்து பாதயாத்திரையாக சென்ற சுமார் 300-க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அனுமதி மறுத்ததால், மலையடிவாரத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பக்தர்கள் சுமார் 500...

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக மக்கள் பேரணி!

0
அமெரிக்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியுமாறும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கட்டாயப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். வாஷிங்டன் நினைவிடம் முதல் லிங்கன் நினைவிடம்...

தேசிய கீதம் இசைக்கும் போது ‘சூயிங் கம்’ மென்ற விராட் கோலி: கிளம்பியது சர்ச்சை!

0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தேசிய கீதம் இசைக்கும்போது  சூயிங் கம் மெல்லும்  காட்சி வெளியாகி, கடும் சர்ச்சையும் கண்டனமும் ஏற்படுத்தி வருகிறது. .நேற்று (ஜனவரி 230 நடந்த தென்னாப்பிரிக்காவுடனான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி...

50-க்கும் மேற்பட்ட டால்பின்கள்; கன்னியாகுமரி அருகே கடற்கரையில் கரை ஒதுங்கி பரபரப்பு!

0
கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் திடீரென 100க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரை ஒதுங்கி,...