​பலன் தரும் ஸ்லோகங்கள்!

​பலன் தரும் ஸ்லோகங்கள்!
Published on

எம்.வசந்தா

உடல் உஷ்ணம் குணமாக

'பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி பரேஸாய நமோ நம
அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோ நம
கமலாஸன தேவேஸ பானு மூர்த்தே நமோ நம
தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம'

பொருள் : கையில் தாமரையைக் கொண்டவரேபேரொளி ஸ்வரூபனாக உலகையே பராமரிப்பவரேபரமேஸ்வரனேசூர்யதேவா, நமஸ்காரம்! அனைத்து பிரம்மாண்டங்களுக்கும் காரணமானவரேஎல்லாவற்றிற்கும் சாட்சியாக விளங்குபவரேசூரிய பகவானே, நமஸ்காரம்!

உடலில் உஷ்ண நோய்கள் வராமலிருக்கவும், வந்தால் அவை விரைவில் குணமாகவும், 'சூரிய ஸ்லோக'மான இந்தத் துதியை கூறி, சூரிய பகவானை வழிபட்டு வந்தால் விரைவில் உடல் நலம் பெறலாம். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்துதியைச்
சொல்லி வழிபடுவது மிகவும் விசேஷம்.

மன சஞ்சலம் நீங்க

'அப் யுத்த ரந் நத தராம் தச நாக்ரலக்ந
முஸ் தாங்கு ராங்கித இவாதி கபீவ ராத்மா
உத் தூதகோ ரஸ லிலாஜ் ஜலதே ருதஞ்சந்
க்ரீடா வராஹ வபு ரீஸ்வர பாஹி ரோகாத்'

பொருள் : ஐயனே குருவாயூரப்பா, மாபெரும் மீட்சிக்காக சுயமாக விரும்பி வராஹ உருவம் கொண்டவரேபூமியையே சுமந்து வந்தவரேகடலின் அடியிலிருந்து பூமி தாயை மீட்டுக்கொண்டு வந்த கருணா மூர்த்தியே, உமக்கு நமஸ்காரம். கொந்தளிக்கும் கடல் போலும், கலங்கிய கடல் போன்றும், மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டிருக்கும் என்னை குணப்படுத்துவீராக!

ஸ்ரீ நாராயணீய தசகத்தில் உள்ள இந்த வாராஹ ஸ்லோகத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சொல்லி ஸ்ரீ வராஹ மூர்த்தியை வழிபட்டு வர, மன சஞ்சலத்தினால் ஏற்படும் நோய்கள் விரைவில் சரியாகும்.

காரிய ஸித்தியாக

'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஓம் நமோபகவதி
அங்காளபரமேஸ்வரி ஏஹியேஹி
ஸகல சௌபாக்யம் மே தேஹி தேஹி
சகல கார்ய ஸித்திம்
குரு குரு ஓம் நமஹ் ஸ்வாஹா'

பொருள் : ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் எனும் பீஜாட்சரங்களோடு கூடிய பகவதியான அங்காள பரமேஸ்வரி தாயே, தங்களுக்கு நமஸ்காரம்! சகல காரிய ஸித்திகளையும் தந்தருள வேண்டும் அம்மா, தங்களை மீண்டும் வணங்குகிறேன் தாயே!

அங்காள பரமேஸ்வரிக்கு பானகம் நிவேதனம் செய்து, இந்தத் துதியை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் பக்தியோடு 18 முறை கூறி வணங்கி வர, அனைத்துக் காரியங்களிலும் ஸித்தி ஏற்படும். அதோடு, உடல் பிணிகள் நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் அபிவிருத்தியாகும்!

கிரக தோஷம் விலக

'ஆவாஹனம் ந ஜானாமி தவார்ச்சனம்
பூஜாம் சைவ ந ஜானாமி க்ஷம்யதாம் பரமேஸ்வர
மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் சுரேஷ்வர
யத்பூஜிதம் மயா தேவ பரிபூரணம் ததஸ்துமே
அபராதஸஹஸ்ராணி க்ரியந்தேஹர்நிஷம் மயா
தஸோயமிதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வர

பொருள் : உன்னுடைய ஆவாஹனம், அர்ச்சனை, பூஜை ஆகியவற்றை எப்படிச் செய்வது என்பது கூட எனக்குத் தெரியவில்லை. பூஜையில் ஏதாவது தவறு நேர்ந்தால் என்னை மன்னித்து விடு. ஹே தேவா, என்னிடம் மந்திரம், செயல்பாடு மற்றும் பக்தி ஆகியவை மிகவும் குறைவு. நான் செய்த ஆரத்தி மற்றும் பூஜையை நீயே பரிபூரணம் ஆக்கு. பகலிலும் இரவிலும் தெரிந்தோ தெரியாமலோ நான் ஆயிரக்கணக்கான தவறுகளை செய்கிறேன். என்னை உன் தாசனாக ஏற்று மன்னித்து விடு.

இந்தத் துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் சந்திரன், ராகு, சுக்ரன் ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதோடு, உடலில் உண்டான ரணங்களும் விரைவில் ஆறும்.

நோயிலிருந்து நிவாரணம் பெற

'ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ'

பொருள் : ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே, வாசுதேவனே, திருக்கரத்தில் அம்ருத கலசத்தை தாங்கியுள்ளவரே, மகாவிஷ்ணு வடிவினராக விளங்கும் உம்மை நமஸ்கரிக்கிறேன். அச்சுதன், அனந்தன், கோவிந்தன் இந்த மூன்று நாமங்களும் நாராயணனுக்கு அம்ருதம் போன்றது. தன்வந்திரி பகவானே, என் அனைத்து நோய்களையும் போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துமாறு தங்களை வேண்டி நமஸ்கரிக்கிறேன்.

இந்தத் துதியை தினமும் காலையில் பூஜையறையில் 21 முறை கூறி, தன்வந்திரி பகவானை போற்றி வழிபட, தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும். உடல் நலமும் ஆரோக்கியம் மேம்படும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com