0,00 INR

No products in the cart.

பஞ்சபாத்திரம் – மூவகை விளக்கம்!

பா.கவிதா

கோயில்களில் பூஜையின்போது, ‘பஞ்சபாத்திரம்’ பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். அதன் இயற்பெயர், ‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பதாகும். அதாவது, ஐவகை பத்திரங்களை (இலைகளை) நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அதற்கு அப்பெயர்.

இனி, பஞ்சபாத்திரத்துக்குக் கொடுக்கப்படும் மூன்று வகை விளக்கங்களைக் காண்போம். முதலாவதாக, துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் ஆகும். இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும் பாத்திரம், ‘பஞ்ச பத்ர பாத்திரம்.’ இதுவே காலப்போக்கில் மருவி, ‘பஞ்ச பாத்திரம்’ என்றானது.

சிறந்த மருத்துவ சக்திகளைக் கொண்ட இந்த பஞ்ச மூலிகைகள் தெய்வீகமானவை; பூஜைக்கும் சிறந்தவை. இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடுவதாலேயே அந்தப் பாத்திரம், ‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம், திருமாலுக்கு உகந்தது துளசி, அம்மனுக்கு வேப்பிலை, விநாயகருக்கு அருகம்புல், பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது ஆகும்.

இரண்டாவதாக, பூஜையில் அர்க்யம், பாத்யம், ஆசமனீயம், ஸ்நானீயம், சர்வார்த்த தோயம் போன்றவற்றுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்கள் பெருமாள் கோயில்களில் ஐந்து பாத்திரங்களில், பெருமாள் முன் வைக்கப்பட்டு இருக்கும். அந்த ஐந்து நீர் வட்டில்களில் ஒன்றிலிருந்துதான் நமக்கு நீரைத் தருகிறார்கள்.

தற்கு ஐந்து பாத்திரங்கள்?’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். அர்க்யம் கைகளை சுத்தம் செய்ய, பாத்யம் பாதங்களை சுத்திகரிக்க, ஆசமனீயம் இது ஆசமனம்,
ஸ்நானீயம் திருமேனிக்கு, சர்வார்த்த தோயம் மேலே உள்ள உபசாரத்தைத் தவிர, மற்ற அனைத்து உபசாரங்களுக்கும் பயன்படுத்துவதால் அந்த ஐந்து பாத்திரங்களையும் பஞ்சபாத்திரங்கள் என்பர். இவை தவிர, தண்ணீர் முகந்து வைக்க இன்னொரு பெரிய பாத்திரமும் தரையில் இருக்கும். அதில் இருந்து நீர் எடுத்துதான் இந்தப் பாத்திரங்களுக்கு நீர் விடுவார்கள்!

நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம் சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்துதான் தருவார்கள். அந்தப் பாத்திரம்தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும். இந்தத் தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள் : பச்சைக் கற்பூரம், ஏலக்காய், லவங்கம், ஜாதிக்காய், வெட்டிவேர் இவற்றுடன் சிறிது மஞ்சள்.

மூன்றாவதாக, பஞ்சபாத்திரத்தை ‘பஞ்சமுகம்’ என்றும் அழைப்பர். பஞ்சமுகம் என்பதற்கு இங்கு அர்த்தம் வேறு. வியாகரண சாஸ்திரப்படி, ‘பஞ்ச’ என்றால் விஸ்தாரம் என்று பொருள். முகம் மட்டும் நன்றாக விரிந்து பெரியதாகவும், உடம்பு ஒடுங்கி

சிறுத்தும் இருப்பதால் இதற்கு, ‘பஞ்சமுகம்’ என்று பெயர். அதேபோல், பூஜைக்கு உபயோகிக்கும் பஞ்ச பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும், உடல் சிறுத்தும் இருப்பதனால் அதனை, ‘பஞ்சபாத்திரம்’ என்று குறிப்பிடுகிறோம்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கடமையும் பலனும்!

0
- ஆதினமிளகி, வீரசிகாமணி ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பது கீதையில் ஓர் உபதேசத் தொடர். ‘பலனை எதிர்பார்க்காமல் எப்படிக் கடமையைச் செய்வது?’ என்று நினைக்கவும், கேட்கவும் தோன்றும். அதன் விளக்கம் அதுவல்ல! ‘கர்மண்யே வாதி...

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

ஆணுக்கும் உண்டு கற்பு!

0
ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண்...

தீபாவளியில் ஸ்ரீலட்சுமி பூஜை!

0
- முத்து.இரத்தினம் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்....

மூச்சு விடும் மூலவர்!

1
- பொ.பாலாஜி கருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது. ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு...