பர்தாவை நீக்கினால் காவி துண்டை கழற்றுவோம்; கர்நாடகாவில் மாணவர்கள் தீவிரம்!

பர்தாவை நீக்கினால் காவி துண்டை கழற்றுவோம்; கர்நாடகாவில் மாணவர்கள் தீவிரம்!

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து  நேற்று (பிப்ரவரி 7) மாணவிகள் ஹிஜாப் அணிந்தபடி வந்து தங்களுடைய உரிமையை நிலைநாட்டக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அங்குள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் மாணவர்கள் இன்று காவி சால்வை அணிந்து  வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அம்மாநிலை வருவாய்த்துறை அமைச்சர் கூறியதாவது;

கர்நாடகாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் பர்தா மற்றும் காவி துண்டு அணிந்து வருவது தவறு. அரசு யாருக்கும் ஆதரவாக இல்லை. அனைத்து மாணவர்களும் சீருடை அணிந்து தான் வர வேண்டும்.  மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com