பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசுத் தலைவர் அளிப்பு!

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசுத் தலைவர் அளிப்பு!

தமிழகத்தின் பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையாவுக்கு 2020-ம் ஆண்டுக்கான பத்மஶ்ரீ விருதை டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி வருகிறார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

பத்ம விருதுகள் மூன்று பிரிவுகளாக அதாவது பத்மஸ்ரீ, பத்மபூஷன் பத்மவிபூஷன் என பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 119 பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார். இந்தப் பட்டியலில் ஏழு பத்மவிபூஷன் விருதுகளும் பத்து பத்மபூஷன் விருதுகளும் 102 பத்மஸ்ரீ விருதுகளும் பெறும் இடம் பெற்றுள்ளன.

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பி.அனிதாவுக்கு குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com