பயிர் காப்பீட்டுக்கு நவம்பர்-15 கடைசித் தேதி: தமிழக அரசு அறிவிப்பு!

பயிர் காப்பீட்டுக்கு நவம்பர்-15 கடைசித் தேதி: தமிழக அரசு அறிவிப்பு!
Published on

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள், நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும்.. மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் விவசாயிகள் நவம்பர் 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ல விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கான காப்பீட்டை டிசம்பர் 15-ம் தேதிக்குள் செய்யலாம். பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பயிர்க்காப்பீடு செய்ய கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம். கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் அல்லது வங்கிகளை அணுகலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com