பீச்சில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு!

பீச்சில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு!

புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் கடற்கரைகளில் குவிவதைத் தடுக்க, ஜனவரி 1-ம் தேதி மற்றும் அதற்கு முந்தைய தினம் பீச்சில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளியுடன் முடிவடைய உள்ள நிலையில், பண்டிகைக் காலங்களில் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் குறித்தும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளீயிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடும்போது, நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதனை தவிர்க்கும் வகையில் வருகிற 31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தேதியும் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தினமும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com