
தேவை:
பேரிச்சம்பழம்– 250 கிராம்
கான்பிளவர் – 2 ஸ்பூன்
ஏலப்பொடி– 1/2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 20
நெய் – ¼ கப்
செய்முறை:
முதலில் 2 கப் சூடான வெந்நீரில் கொட்டைகள் நீக்கிய பேரிச்சம் பழத்தை போட்டு ஊறவிடவும் . அரை மணி நேரம் கழித்து பேரிச்சம் பழங்களை ஒரு கப் நீர் விட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். அடி கனமான வாணலியில் அரைத்த விழுதைப் போட்டு நெய் விட்டு நன்கு கிளறவும் . கெட்டியாகி வரும்போது சோளமாவை நீரில் கட்டியில்லாமல் கரைத்து பேரிச்சம்பழ கலவையில் சேர்த்து கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும். இந்த அல்வாவுக்கு சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை. பேரிச்சம்பழ இனிப்பே போதுமானதாக இருக்கும். விரும்பினால், அரை கப் சர்க்கரை சேர்த்துக் கிளறலாம். பின்னர் நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் வில்லைகள் போடவும். சுவையான, சத்தான பேரிச்சம்பழ அல்வா ரெடி.
கே எஸ் கிருஷ்ணவேணி பெருங்குடி.