பெருமாளுக்கு இறுதி நாள் வரை சேவை செய்யணும்: டாலர் சேஷாத்ரி!

பெருமாளுக்கு இறுதி நாள் வரை சேவை செய்யணும்: டாலர் சேஷாத்ரி!

-காயத்ரி.

திருப்பதிதிருமலை கோவிலின் சிறப்புப் பணி அதிகாரியாகப் பணியாற்றிய டாலர் சேஷாத்ரி இன்று (நவம்பர் 28) அதிகாலையில் மாரடைப்பால் இறந்தார்.

திருமலை திருப்பதி கோயிலில் 1977-ம்ஆண்டுடாலர் சேஷாத்ரி பணியில்சேர்ந்தபோது, பெருமாளின் திருவாபரணங்களை நிர்வகிக்கும் பொக்கிஷதாரர் பணிவழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழுமலையானின் திருவாபரணங்களை நிர்வகிக்கும் பொறுப்பான பதவி என்பதால், இந்த பணியை மேற்கொள்ள பலரும் தயங்குவர். பெருமாளுக்குரிய அந்த திருவாபரணங்களில் பதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய நவரத்தினகல் காணாமல் போனால் கூட பதில் சொல்ல வேண்டிய பொறுப்பான பதவி!

வாரிசுகள் யாரும் இல்லாத சேஷாத்திரி ''என்னுடைய இறுதி நாள் வரை நான் இறை சேவையில் இருக்க வேண்டும். அதை மட்டுமே நான் ஏழுமலையான் வேண்டிக்கொள்கிறேன்'' என்று அடிக்கடி கூறுவார்.
அதற்கேறப, திருப்பதி கோயிலின் சார்பாக சிறப்புப் பணி அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். இதனால், இறுதிவரை ஏழுமலையான் கோவிலில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ் தானம் சார்பில் விசாகப்பட்டினத்தில் இன்று நடத்தப்படவுள்ள கார்த்திகை தீபஉற்சவ நிகழ்ச்சியை நிர்வகிப் பதற்காகடாலர் சேஷாத்ரி அங்குசென்றிருந்தார். இந்நிலையில் இன்று (ந்வம்பர் 28) அதிகாலைமாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். எப்போதும் கனத்ததங்க சங்கிலியில் பொருத்தப்பட்ட மிகப்பெரிய தங்கடாலருடன் காட்சியளித்ததால், அவருக்கு டாலர்சேஷாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது.

இதற்கு முன்னர் மூன்று முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மீண்டு குணமான நிலையில் இன்று அதிகாலை நான்காவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு டாலர் சேஷாத்ரி காலமானதாக சொல்லப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com