online@kalkiweekly.com

 பொலிடிகல் பிட்ஸா

 கௌதம் ராம்

வீரிட்டு எழும் வருண் காந்தி

ளும் பா.ஜ.க. தரப்பில் பொதுவாக காந்தியை உயர்த்திப் பிடித்தாலும், அவர்களுக்குள்ளே ஒரு கூட்டம் காந்தியை அவமதிப்பதும், கோட்சே துதி பாடுவதுமாக இருக்கிறார்கள். வழக்கம்போல, இந்த வருட காந்தி ஜெயந்தி சமயத்தில் அவர்கள் கோட்சே புகழ்பாட, சற்றும் எதிர்பாராத இடத்தில் இருந்து ஒரு உரத்த எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. ஆம்! மேனகா காந்தியின் மகனும், லோக்சபா எம்.பி.யுமான வருண் காந்தி ட்விட்டர் மூலமாக அந்த துதிபாடிகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். “கோட்ஸே வாழ்க என்று சொல்லி, நாட்டை கேவலப்படுத்தாதீர்கள்!” என்பது அவரது ட்விட்டர் குரல்! மற்ற பா.ஜ.க. பெருந்தலைகள் மௌனம் சாதிப்பது ஏன்?

முற்றிய வாரிசுப் போர்

ந்தியாவில் அரசியல் கட்சி என்றாலே அது குடும்பக் கட்சிகள்தான். அதில் சின்னக் கட்சி, பெரியக் கட்சி, மாநிலக் கட்சி, தேசியக் கட்சி என்ற பாகுபாடு ஏதும் கிடையாது.

குடும்பத்தில் பங்காளி சண்டைப் போல கட்சியிலும் அதிகாரத்தைப் பிடிப்பதில் சண்டை சகஜம். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் பீகார் மாநிலத்தில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி. அவர் மறைவுக்குப் பின், அவரது மகன் சிராக் பாஸ்வானின் கை ஓங்கி இருந்தது. இப்போது, அவருக்கும், அவருடைய சித்தப்பாவும், மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பரசுக்கும் “யார் பாஸ்வானின் அரசியல் வாரிசு?” என்பதில் மோதல் முற்றி, ஒருவர், மற்றவரை கட்சியில் இருந்து நீக்குமளவுக்கு அசிங்கமாகி, இப்போது விஷயம் தேர்தல் கமிஷனுக்குப் போயிருக்கிறது. தேர்தல் கமிஷன், லோக் ஜனசக்தி கட்சி என்ற பெயரையோ, கட்சியின் சின்னத்தையோ இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது” என்று சொல்லி இருக்கிறது. சரிதான்! அடுத்து, தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதா ஒரு கேஸ் போடுறதுதானே வழக்கம்?

கோவாவின்கைஜம்ப் 

கோவாவில் கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் 17 இடங்களில் ஜெயித்து, அதிக இடங்களில் வென்ற ஆனால் மெஜாரிடி இல்லாத கட்சியாக இருந்தது காங்கிரஸ்.  ஆனால், ஆக்ஷன் கிங் அமித்ஷாவின் வியூகத்தால் 13 இடங்களில் மட்டுமே ஜெயித்த பா.ஜ.க. உதிரிக் கட்சிகள், சுயேச்சைகளை வளைத்துப் போட்டு, நாற்காலியைக் கைப்பற்றியது. இதெல்லாம் பழைய கதை. 17 இடங்களில் ஜெயித்த காங்கிரஸ் கட்சியால் தன் கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆளாளுக்கு காங்கிரசில் இருந்து ஜம்ப் பண்ண ஆரம்பித்து, இப்போது காங்கிரசுக்கு வெறும் நாலு எம்.எல்.ஏ.க்கள்தான். இதற்கு நடுவில் அண்மையில் ஒரு எம்.எல்.ஏ. காங்கிரசில் இருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரசில் சேர்ந்திருக்கிறார். விரைவில் இன்னொரு எம்.எல்.ஏ. ஆம் ஆத்மிக்கு போகப்போவது உறுதி என்கிறது கோவா பட்சி! இப்படியே போனால் காங்கிரசில் அம்மா, மகன், மகள் மூவர் மட்டுமே மிஞ்சுவாங்க போல!

சர்ச்சை பாரதி

த்தியப் பிரதேசத்தில் மீண்டும் பரபரப்பு அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் முன்னாள் பா.ஜ.க. முதலமைச்சர் உமா பாரதி. திடீரென்று, “ம.பி.யில் முழு மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும்” என்று சொல்ல, சர்ச்சை ஆரம்பித்தது. அடுத்து அரசாங்க அதிகாரிகளின் செயல்பாடு பற்றிய இவரது கமென்ட் வீடியோ வைரல் ஆனது. அடுத்து, உமாபாரதியின் சர்ச்சை வீடியோக்களை கடுமையாக விமர்சனம் செய்த, காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கிற்கு நக்கலாக இவர் எழுதிய மன்னிப்புக் கடிதம் சர்ச்சை கிளப்பியது. கடைசியாக, “எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் காங்கிரஸ்தான்!” என்று சொல்லி ஒரு சிக்சர் அடித்திருக்கிறார்! பாரதி காணாத புதுமைப்பெண்ணோ இந்த உமா பாரதி?

ஒண்ணேகால் ரூபாய் நஷ்ட ஈடு!

ல மிடில்கிளாஸ் மக்களின் வயிற்றில் அடித்த மும்பை பி.எம்.சி.பேங்க் ஊழல் பற்றி மகாராஷ்டிர பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டில், ” ஊழலில் சிவசேனா எம்.பி.யும், சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவதுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்ட, உடனே சஞ்சய் ராவத், பாட்டில் மீது மான நஷ்ட வழக்கு போட்டுவிட்டார். வழக்கமாக அரசியல்வாதிகள் (தங்களுக்கு) இல்லாத மானத்துக்கு  நஷ்டஈடாக ஒரு கோடி, ரெண்டு கோடி என்றுதானே கேட்பார்கள். நம்ம சிவசேனா புலி, நஷ்டஈடாக வெறும் ஒன்றேகால் ரூபாய் கேட்டு கேஸ் போட்டிருக்கிறார். என்ன காரணமாம்? “சந்திரகாந்த் பாட்டிலின் மதிப்பு அவ்வளவுதான்! அதிக தொகை கேட்டு அவர் மதிப்பை அதிகரிக்க விரும்பவில்லை!” என்கிறார் ராவத்.  ஒண்ணேகால் ரூபாய்க்கு ஒரு கேஸ்! அதற்கு ஒரு கோர்ட்! அட தேவுடா!

கூல்! கம்யூனிஸ்ட் தோழர்களே!

பீகார் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த முன்னாள் டெல்லி பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்ஹயா குமார் அண்மையில் காங்கிரசில் சேர்ந்துவிட்டார். ஆனால், அவர் கம்யூனிஸ்ட் கொள்கைப் பிடிப்பு காரணமாக கட்சியை விட்டுப் போகமாட்டார் என்று பலமாக நம்பிய கம்யூனிஸ்ட் பெரிய புள்ளிகளுக்கு இது பயங்கர ஷாக்! பீகாரில் பரபரப்பாக பேசப்படும் ஒரு தகவல் என்ன தெரியுமா? காங்கிரசில் சேரும் நோக்கத்துடன் பாட்னா கம்யூனிஸ்ட் கட்சி ஆபீசில் இருந்து தன் அறையை காலி செய்யும்போது ஒரு ஏ.சி. யூனிட்டையும் கழற்றி எடுத்துக் கொண்டு போய்விட்டாராம் கன்ஹயா குமார்! காரணம், அவர் சொந்த செலவில் வாங்கி போட்டுக்கொண்ட ஏ.சி.யாம் அது! கூல்! கூல்! கம்யூனிஸ்ட் தோழர்களே!

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

செல்சாரைத் தேடிய ரா.கி.ரா

1
சுஜாதா தேசிகன்                                             ...

உங்கள் குரல்

1
தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்துள்ள  தமிழக அரசை பாராட்டி, ’அந்தப் பணியை செம்மையாக நிறைவேற்றிய செவிலியர்கள்/மருத்துவர்கள் கடவுளின் தூதர்களாகப் பார்க்கப்படுவார்கள். அவர்களை மனதார பாராட்டி நன்றி சொல்லி பெருமிதம் கொள்வோம்’  என்ற கல்கியின்...

விமானத்தின் வேகத்தில் ரயில் பயணம் !

0
இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் சந்திப்பு:  ராசி பாஸ்கர் “சக்கரத்திற்கும் சாலைக்கும் உள்ள உராய்வும், காற்றினால் ஏற்படும் உராய்வும், நாம் வேகமாகச் செல்வதற்குத் தடையாக இருப்பதோடு அதிக ஆற்றல் செலவினத்தை உருவாக்குகிறது. இந்த இடையூறுகளிலிருந்து விடுபட்டு வேகமாகப்...

போராடி அலையும் யானைகளின் கதை

0
சரஸ்வதி காயத்திரி (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு) வலசை அச்சுக்கு வருவதற்கு முன்பே விருது பெற்றிருக்கும் சு.வேணுகோபாலின் இரண்டாவது நாவல் என்ற சிறப்பும் இதற்கு உண்டு ஒரு விவசாயியாக , இந்த நிஜ உலகைப்...

காதலுக்கு மரியாதை

0
ஹர்ஷா தன் காதலுக்காக நாட்டின்  மன்னராகும் வாய்ப்பை தியாகம் செய்து முடி துறந்து சரித்திரத்தில் இடம் பெற்ற இளவரசர்களை நாம் அறிவோம். கடந்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து அரச குடும்பத்தில் கூட நிகழ்ந்திருக்கிறது,  பிரிட்டனின்...
spot_img

To Advertise Contact :