பொங்கல் பரிசுத்தொகுப்பு: ஜனவரி-3 முதல் விநியோகம் என தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பரிசுத்தொகுப்பு: ஜனவரி-3 முதல் விநியோகம் என தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் தெரிவ்விக்கப் பட்டதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அநதவகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இத்தோடு கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகுப்பில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் உள்ளிட்ட 21 மளிகை பொருட்கள் இடம்பிடித்துள்ளது. ஜனவரி-3 முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

-இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோக ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் .பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com