0,00 INR

No products in the cart.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன்!

பொன்மனச் செம்மல் என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமசந்திரன் தமிழக திரையுலகிலும் அரசியலிலும் தனி முத்திரை பதித்தவர். 1987-ம் வருடம் டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் காலமானார். அதைத் தொடர்ந்து வெளியான கல்கி இதழில் வெளியான தலையங்கம்..இதோ!

னிதாபிமானத்தின் மொத்த உரு மறைந்து போனது; பொன்மனச் செம்மலை இழந்த தமிழகம் ஏழையாகிவிட்டது; மக்கள் திலகமிழந்து தவிக்கின்றனர்; கொடுத்துச் சிவந்த கரங்கள் ஓய்ந்து போயின.

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், டாக்டர் போன்ற பட்டங்களுள் எம்.ஜி.ஆருக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானது பொன்மனச் செம்மல் என்ற வர்ணனையே. இதற்கு நிருபணமாக, அவரது திரை உலக வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி, அவரைக் குறை கூறி விமர்சித்தவர்கள்கூட அவரது மனம், பொன்மனம் என ஒப்புக் கொண்டதைக் கூறலாம். அந்தப் பொன்னான மனம்தான் படிப்பறியா ஏழைச் சிறுவனாக இருந்த அவரைப் படிப்படியாக வாழ்க்கையில் உயரச் செய்து, மாநில முதல்வர் பதவியில் அமர்த்தியது. சாமானிய நிலையிலிருந்து வளர்ந்த காரணத்தாலேயே அவரால் சாமானிய மக்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு அனுதாபத்துடன் நடந்துகொள்ள முடிந்தது.

திரை உலகில் கொடிகட்டிப் பறந்து பணம் குவித்தபோதே கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் அவருடையவை.

அவருடைய படங்களையும் நடிப்பையும் குறை கூறி விமர்சித்தவர்கள் உண்டு. ஆனால், அவர் படம் எடுத்தது கிரிடிக்குகளுக்காக அல்ல. சாமானிய மக்களின் நலனை மனத்தில் கொண்டே அவர் படங்களைத் தயாரித்தார்; நடித்தார். அந்தப் படங்களில் அவர் காதலைப் போற்றினார்; முறை தவறிய காதலை அல்ல! வீரத்தை வளர்த்தார்; வன்முறையை அல்ல! நேர்மை, ஒழுக்கம், தேசபக்தி, இரக்கம், உழைப்பு, கடமை உணர்வு போன்ற உயர்ந்த குணங்களைத் தமது திரைப்படங்கள் மூலம் மக்களிடையே அவர் வளர்த்தார். இவை அவருடைய மனிதாபிமானத்தின் மறு வடிவங்களே.

இந்த மனிதாபிமானம் காரணமாகவே ஆட்சிக்கு வருவது அவருக்கு எளிதாயிற்று. ஆட்சியில் அமர்ந்த பிறகும் பொன்மனச் செம்மலின் மனிதாபிமானப் பணிகள் தொடர்ந்தன. இலவசச் சத்துணவில் ஆரம்பித்து, இலவசக் காலணிகள் வரை பலப்பல பொருள்களை ஏழை மக்களுக்குக் கிடைக்கச் செய்தார். இதனைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் தவறு என்று விமர்சிப்பது சாத்தியமே. ஆனால், மனிதாபிமானம் என்பது பொருளாதார நியதிகளைக் கடந்து நிற்கும் ஒன்று. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால்கூட, லோன் மேளா நடத்திக் காகித நோட்டுக்களை மக்களிடையே வாரிவிட்டுப் பண வீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் உருவாக்கி அவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவதைவிட, உற்பத்தியான பொருள்களை இலவசமாக வழங்குவது எவ்வளவோ மேலானது.

எம்.ஜி.ஆருடைய மற்றொரு சிறப்பியல்பு அவருடைய யதார்த்தப் போக்கும் அதன் விளைவாகக் காலத்துக்கு ஏற்பத் தமது கொள்கைகளை மாற்றிக்கொள்ளத் தயங்காத தன்மையும். இந்தப் பரந்த மனப்பான்மைதான் அ.தி.மு.க. என்ற பெயரை அ.இ.அ.தி.மு.க. என்று மாற்றியமைக்கத் தூண்டுதலாக இருந்தது. இந்த ஒரே ஒரு செயலின் மூலமே அவர் தேசிய ஒருமைப்பாட்டினை மிக அழுத்தமாக வலியுறுத்தி, பிரதேசப் பற்றைக் கடந்து நின்ற அனைத்திந்தியத் தலைவராகி விட்டார்! விடுதலைப் புலிகளை ஆதரித்து, அரசு கஜானாவிலிருந்தே அவர்களுக்குப் பண உதவியும் செய்து வந்த அவர், இந்தியா – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பிரத்யட்ச நிலையை உணர்ந்து அதற்கு முழு ஆதரவை அளித்தார். விடுதலைப்புலிகளை அவர் விரோதித்துக் கொள்ளவில்லை. எனினும், அவர்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதி திரும்பவும் ஜனநாயகம் மலரவும் ஒத்துழைக்க வேண்டும் என்று விரும்பிச் செயலாற்றினர். திராவிடர் கழகப் பாரம்பரியத்தில் வந்தபோதிலும் இறையுணர்வு மிக்கவராக மாறி, மக்களின் மனங்களை முன்னெப்போதையும்விட அதிகமாக கவர்ந்தார்.

அவருடைய திடசித்தமும் அஞ்சா நெஞ்சமும் அவர் குண்டடிப்பட்ட நிலையிலும் துணை நின்றன; கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் கடமைகளைக் கடைசி வரை கவனிக்கத் தூண்டின. எம்.ஜி.ஆரின் ஆட்சியில் குறைகள் இல்லாமல் இல்லை; ஆனால் அவற்றை எண்ணிப் பார்க்கிற தருணம் அல்ல இது. நிறைகளை ஏற்று, குறைகளை இட்டு நிரப்பித் தமிழகத்தை அவர் கனவு கண்ட உன்னத நிலைக்கு உயர்த்த அனைவரும் உறுதி பூண வேண்டிய நேரம்.

இன்று அவர் உடல் அமைதி அடைந்துவிட்டது; ஆன்மா சாந்தி பெற்றுவிட்டது; தமிழக மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் அமரர் ஆனார், எம்.ஜி.ஆர்.கண்ணீர் விட்டுக் கதறும் தமிழகம், இப்படிப்பட்ட ஒரு தவப் புதல்வனைப் பெற்றதற்காகத் தலைநிமிர்ந்தும் நிற்கிறது.

கல்கி 1988 ஜனவரி-3 இதழில் தலையங்கமாக வந்தது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

yoga day

எல்லாம் தரும் வரம் யோகா

0
இந்தியாவின் மிக அறிய பொக்கிஷமாக கருதப்படுகிறது யோகா. யோகாவால் எண்ணிலடங்கா உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது இப்போது பலருக்கும் தெரிந்துள்ளது.இந்தியா மட்டும் இல்லாமால் வெளிநாடுகளில் கூட தற்போது யோகா கலையை மிகவும் பரவலாக பயன்படுத்தி...
studies after 12th

என்ன படிக்கலாம்…எங்கு படிக்கலாம்?

0
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாட ஆரம்பிக்கும் முன், அவர்களை முழுவதும் ஆட்கொண்டுள்ளது உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள்.  மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மட்டும் உயர்வாக நினைத்து வந்த நிலைமாறி,...
veetla vishesham movie

“வீட்ல விசேஷம் ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம்” – ஆர்.ஜே.பாலாஜி

0
குடும்பங்களையும் நண்பர்களையும் திரையரங்குகளில் ஒன்றிணைப்பதில் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள...
yogi babu new movie

யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்

0
ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்” திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால்,...
dance master chinna

200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா மரணம்

0
முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தை போல, செந்தூர பாண்டி, நேசம் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா...