நான்கு தலைமுறை நாவல் வாசிப்பு!

நான்கு தலைமுறை நாவல் வாசிப்பு!
-காமகோடி வீழிநாதன்

மிழ் இலக்கியத்தில் தொடர் நாவல்களுக்கு இலக்கணம் வகுத்தவர்
அமரர் ராமஸ்வாமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இவர் எழுதிய தியாக பூமி, அலை ஓசை ஆகிய இரு நாவல்களையும் வாரம் தோறும் படிக்கமல் காலம் சென்ற எனது அம்மாவுக்கும் வேம்பு மாமிக்கும் உறக்கமே வராது என்று அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எங்களது அடுத்த தலைமுறையான நானும் எனது மனைவியும் அமரர் கல்கி அவர்களின் எழுத்தோவியத்தில் வெளியான, 'பொன்னியின் செல்வன்' புதினத்தை வாசித்து மகிழ்ந்தோம். அடுத்ததாக, தில்லியில் வசித்தபோது மீண்டும் நான், எனது மனைவி, எனது மகள் மற்றும் மகன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, 'பொன்னியின் செல்வன்' நாவலை வாசிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தோம்.

ற்போது எண்பத்தைந்து வயதாகும் நானும், எண்பது வயதாகும் எனது மனைவியும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கிறோம். இப்போதும் நாங்கள், எங்களின் பேரன், பேத்திகளோடு நான்காவது தலைமுறையாக கூட்டாகச் சேர்ந்து, 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்து மகிழ்கிறோம். அதற்காகவே எனது மகன் புதிதாக சில செட் 'பொன்னியின் செல்வன்' நாவல் தொகுப்புகளை வீட்டில் வாங்கி வைத்திருக்கிறான். தலைமுறை தலைமுறையாக அமரர் கல்கி அவர்களின் நாவல்களை வாசிக்கும் ஆவல் என்றுமே குறைவதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். இதை எல்லாம்வல்ல இறைவனின் கருணை என்றே சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com