0,00 INR

No products in the cart.

ஆயிரம் வரைந்தாலும் அவர் கதைக்கு ஈடாகாது!

– ஓவியர் தமிழ்

மரர் கல்கியின் படைப்புகள் என்றாலே மனதுக்குள் ஓர் உற்சாகம் பீறிட்டுக் கிளம்பும். ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பெயரை உச்சரிக்கும்பொழுதே மனதிற்குள் குதிரை ஓடத் தொடங்கும். வாசகன் ஒவ்வொருவனையும் காட்சிவழியே கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்று கதாபாத்திரத்துடன் நடமாடவிட்டு கதை சொல்லும் வித்தைக்காரர் அமரர் கல்கி.

ஒரு சாதாரண வாசகனை கற்பனை லோகத்துக்கு அழைத்துச் சென்று, அவனை ஒரு புதிய உலகத்திற்குள் சஞ்சரிக்க செய்கின்ற அவருடைய எழுத்தாற்றல் ஒரு ஓவியனுக்கு எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

வ்வொரு காட்சியும் மனக்கண் முன்னே ஓடும்போது, அத்தனையும் ஓவியமாகவும் நேரில் நடப்பது போலவும் அவர் சித்தரிக்கின்றபோது, உடனே பேனாவை எடுத்து வரைய வேண்டும் என்ற உற்சாகத்தை மனதுக்குள் எழுப்பிக்கொண்டே இருக்கும்.

பல நேரங்களில் எதைக் காட்சிப்படுத்துவதுஎந்தக் காட்சியை விட்டுச் செல்வது என்ற குழப்பம் மனதிற்குள் தேங்கி நிற்கும். ஒவ்வொரு முறை பொன்னியின் செல்வன் படம் போடும்பொழுதும், எத்தனை படங்கள் போட்டு முடித்தாலும் அவர் கூறியதை முழுமையாக நாம் சொல்லவில்லையோ என்ற எண்ணம் வந்து மோதும்.

‘ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை, ஒரு ஓவியம் சொல்லும்’ என்று கூறுவார்கள். ஆனால், அவருடைய ஆயிரம் வார்த்தைகளுக்கும் ஆயிரம் படம் வரைந்தாலும் அந்த ஆயிரமும் அவர் சொல்வதைச் சரியாகச் சொல்லவில்லையோ என்றுதான் தோன்றும். அதுவே உண்மையும் கூட.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பொன்னியின் செல்வன் கதையும்… நானும்!

- சீர்மிகு எழுத்தாளர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர் சிவசங்கரி ‘பொன்னியின் செல்வன்’ தொடர் முதன் முதலில் கல்கி பத்திரிகையில் 1950ஆம் ஆண்டு துவங்கியபோது எனக்கு வயசு 8. கதைகளைப் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டாத...

பொன்னியின் செல்வனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்!

- 'கிரைம் கதை மன்னன்' ராஜேஷ்குமார் மகாபாரதம் எனும் காவியத்தை நம்மால் எப்படி மறக்க முடியாதோ, அதைப்போலத்தான், ‘பொன்னியின் செல்வன்’ என்கிற சரித்திர நாவல் தொடரையும் தமிழ் வாசகர்களால் மறக்க முடியாது. ‘பொன்னியின் செல்வன்’...

வாசிப்பின் அனுபவத்தைப் புரியவைத்த பொன்னியின் செல்வன்!

0
- சரித்திர நாவலாசிரியர் விஷ்வக்ஸேனன் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பள்ளிப் பருவமும், கல்லூரிக் காலமும்தான் பசுமையானவை, ஆனந்தம் நிறைந்தவை, முதுமையை அடைந்த பின்னரும் இளமையைத் திரும்பத் தருபவை. வாழ்வின் அந்த அனுபவங்கள் தரும் சுகத்தை,...

நினைவில் கலந்த முதல் சந்திப்பு!

0
- ஓவியர் லலிதா என் மனம் கவர்ந்த பெரும் சிறந்த காவியம் அமரர் கல்கியின், ‘பொன்னியின் செல்வன்.’ இந்த காவியத்தின் அனைத்துப் பகுதிகளுமே சுவையும் சுவாரசியம் மிகுந்தவைதான். எதை எழுத, எதை விட எனும்...

பொன்னியின் செல்வனைப் பாராயணம் செய்வேன்!

- எழுத்தாளர் த.கி.நீலகண்டன் பொன்னியின் செல்வன் தொடர் 60களில் கல்கியில் வந்துகொண்டிருந்த காலகட்டம். அப்போதெல்லாம் அம்மாவின் ஆபீஸில் சர்குலேடிங் லைப்ரரியில்தான் வாரப் பத்திரிகைகள் வந்து சர்குலேட் ஆகும். எங்கள் டர்ன் வரும் வரை வீட்டில்...