ஆயிரம் வரைந்தாலும் அவர் கதைக்கு ஈடாகாது!

ஆயிரம் வரைந்தாலும் அவர் கதைக்கு ஈடாகாது!

– ஓவியர் தமிழ்

மரர் கல்கியின் படைப்புகள் என்றாலே மனதுக்குள் ஓர் உற்சாகம் பீறிட்டுக் கிளம்பும். 'பொன்னியின் செல்வன்' நாவல் பெயரை உச்சரிக்கும்பொழுதே மனதிற்குள் குதிரை ஓடத் தொடங்கும். வாசகன் ஒவ்வொருவனையும் காட்சிவழியே கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்று கதாபாத்திரத்துடன் நடமாடவிட்டு கதை சொல்லும் வித்தைக்காரர் அமரர் கல்கி.

ஒரு சாதாரண வாசகனை கற்பனை லோகத்துக்கு அழைத்துச் சென்று, அவனை ஒரு புதிய உலகத்திற்குள் சஞ்சரிக்க செய்கின்ற அவருடைய எழுத்தாற்றல் ஒரு ஓவியனுக்கு எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

வ்வொரு காட்சியும் மனக்கண் முன்னே ஓடும்போது, அத்தனையும் ஓவியமாகவும் நேரில் நடப்பது போலவும் அவர் சித்தரிக்கின்றபோது, உடனே பேனாவை எடுத்து வரைய வேண்டும் என்ற உற்சாகத்தை மனதுக்குள் எழுப்பிக்கொண்டே இருக்கும்.

பல நேரங்களில் எதைக் காட்சிப்படுத்துவதுஎந்தக் காட்சியை விட்டுச் செல்வது என்ற குழப்பம் மனதிற்குள் தேங்கி நிற்கும். ஒவ்வொரு முறை பொன்னியின் செல்வன் படம் போடும்பொழுதும், எத்தனை படங்கள் போட்டு முடித்தாலும் அவர் கூறியதை முழுமையாக நாம் சொல்லவில்லையோ என்ற எண்ணம் வந்து மோதும்.

'ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை, ஒரு ஓவியம் சொல்லும்' என்று கூறுவார்கள். ஆனால், அவருடைய ஆயிரம் வார்த்தைகளுக்கும் ஆயிரம் படம் வரைந்தாலும் அந்த ஆயிரமும் அவர் சொல்வதைச் சரியாகச் சொல்லவில்லையோ என்றுதான் தோன்றும். அதுவே உண்மையும் கூட.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com