0,00 INR

No products in the cart.

பூஜைக்கேற்ற பூவிது!

ஆர்.ராமலெட்சுமி

l விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. ஆனால், விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.

l சிவபெருமானுக்குத் தாழம்பூ ஆகாது. தும்பை, வில்வம், கொன்றை ஆகியவை அவருக்கு விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம். விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.

l பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

l விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

l எந்த தெய்வ வழிபாட்டிலும் துலுக்க சாமந்திப் பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

l அர்ச்சனை செய்யும்போது மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யக்கூடாது.

l வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது.

l அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

l ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

l தாமரை, நீலோத்பவம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்தில் இருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதி இல்லை.

l வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, தகாதவர்களால் தொடப்பட்டது மற்றும் நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக்கொண்டு எடுத்து வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

l சம்பக மொட்டு தவிர, வேறு மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

l வில்வம், துளசியை தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

l முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை, ‘பஞ்ச வில்வம்’ எனப்படும். இவை பூஜைக்கு மிக உகந்தவை.

l துளசி, முகிழ் (மகிழம்), செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மரிக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுகராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலையும் பூஜைக்கு உகந்தவை.

பூஜைக்குரிய மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷ பலனைத் தரக்கூடியவை!

l செந்தாமரை நல்ல தனத்தையும், வியாபார விருத்தியுடன் ஆத்ம பலத்தையும், சூரிய கிரக கடாட்சத்தையும் தரும்.

l வெண்தாமரை, வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி போன்றவை மன சஞ்சலத்தைப் போக்கும்.

l மஞ்சள் அரளி, பொன் அரளி மலர்கள் கடன்களைத் தீர்க்கும். கன்னியருக்குத் திருமணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். குரு கிரகப் பீடையை நீக்கும்.

l சிவப்பு அரளி தாங்க முடியாத கவலைகளைத் தீர்த்து, குடும்ப ஒற்றுமைையக் கூட்டி வைக்கும்.

l நீலச்சங்கு புஷ்பம், நீலக் கனகாம்பரம் போன்றவை அவச்சொற்கள், தீராத அபாண்டங்கள், தரித்திரம் ஆகியவற்றைத் தீர்க்கும். சனி பகவானின் அருளையும் பெற்றுத் தரும். ஆயுளைப் பெருக்கும்.

l மனோரஞ்சிதம் தம்பதிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும்.

l பாரிஜாதம், அல்லிப்பூ, மங்கிய வெள்ளைப் புஷ்பங்கள் சிறந்த பக்தியையும், அதிர்ஷ்டங்களையும் தரும். தாயாரின் ஆயுளை விருத்தி செய்யும். சந்திர கிரகப் பிரீதியைத் தரும்.

l பாசிப் பச்சையும், மருக்கொழுந்தும் நல்ல விசேஷங்களையும், விவேகத்தையும், சுக போகங்களையும் தரும்.

l அடுக்கு, அரளி, செம்பருத்தி போன்றைவ ஞானம், தொழில் விருத்தி ஆகியவற்றைத் தரும்.

l வில்வ புஷ்பம், கருந்துளசி புஷ்பம், மகிழ மலர் ஆகியவை ராகு, கேது கிரகங்களின் அருளைப் பெற்றுத் தரும்.

l மகாலட்சுமிக்கு பிடித்தமான மலர்கள் செந்தாமரையும், செவ்வந்தியும் ஆகும். செந்தாமரை காலை நேரத்திலும், செவ்வந்தி மாலை நேரத்திலும் மலரும். செல்வம் வற்றாமல் இருக்க இம்மலர்களைக் கொண்டு பூஜை செய்யலாம்.

l மல்லிகைப் பூவால் தாயாரை பூஜை செய்தால் மன அமைதி பெறலாம்.

l நாகலிங்கப் பூவால் இறைவனை பூஜை செய்தால் லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம் ஏற்படும்.

l வாடாமல்லி பூவால் இறை மூர்த்தங்களை பூஜை செய்தால் மரண பயம் ஒழியும்.

l அலரிப் பூவால் பூஜை செய்தால் இன்பம் பெருகும்.

l கொடி ரோஜாவால் பூஜை செய்ய, குடும்பப் பிரச்னைகள் தீரும்.

l பூஜைக்குப் பயன்படுத்திய பூக்களை மறுநாள் செடி, கொடிகளின் கீழே மண்ணில் போட்டு வைத்தால் நல்ல உரமாகும்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

அக்னி தேவனுக்கு உதவிய அர்ச்சுனன்!

- ரேவதி பாலு நமது நான்கு வேதங்களான ரிக், சாம, யஜுர், அதர்வண வேதங்களுள் ரிக் வேதமே மிகத் தொன்மையானது. இந்த வேதத்தில் இருநூறு ஸ்லோகங்கள் அக்னி பகவான் குறித்தே சொல்லப்பட்டிருக்கின்றன. அக்னி என்றால் நெருப்பு....

பலன் தரும் ஸ்லோகம்

0
எதிர்மறை சக்திகள் அகல... ‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னை வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.’ - திருமுறை எனும் ஸ்லோகத்தை காலை, மாலை தீபம் ஏற்றும்போது மூன்று அல்லது ஒன்பது...

பள்ளியறை பூஜை பலன்கள்!

0
- எம்.ஏ.நிவேதா சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை, பள்ளியறை பூஜை ஆகும். அதாவது, சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறை ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப்...

பௌர்ணமியில் அம்பிகை பூஜை!

2
- பொ.பாலாஜிகணேஷ் முழு நிலவு காணும் பௌர்ணமி தினங்களில் அம்பிகையை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீ சக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு நித்யைகளாக மகா...