0,00 INR

No products in the cart.

பிரத்யேக பேட்டி கலகல சந்திப்பு:

சந்திப்பு: பத்மினி பட்டாபிராமன்

கிரேசி மோகன் அவர்களின் சகோதரர் மாது பாலாஜி அவர்களை Kalki Online
யூ ட்யூப் சேனலுக்காக சந்தித்தோம். பல்வேறு வாசகர்களின் கேள்விகளுக்கு படு ஜாலியாக பதில் அளித்திருந்தார். சாம்பிளுக்கு இதோ..

அதிபுத்திசாலிகள் ஆண்களா பெண்களா?
பெண்கள்தான் என்று சொல்லாவிட்டால் வீட்டில் சாப்பாடு கிடைக்குமா?
இது ஜோக் என்றாலும் உண்மையில் பெண்கள் அதிபுத்திசாலிகள் என்பதற்கு உதாரணமாக…..

மேடை நாடக நகைச்சுவைக்கும், திரைப்பட நகைச்சுவைக்கும் உள்ள வேறுபாடு என்று எதைச் சொல்வீர்கள்?
வீட்டுச் சாப்பாட்டுக்கும், ஹோட்டல் சாப்பாட்டுக்கும் உள்ள வேறுபாடுதான். எப்படி தெரியுமா?

கிரேசி மோகன், கமலஹாசன் இணைந்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
அவ்வை ஷண்முகி.. காரணம் என்ன என்றால்…

…மங்கையர் மலர் வாசகர்களின் எடக்கு முடக்கு கேள்விகளுக்கு
மாது பாலாஜி அளித்த பளீர் பதில்களுடன்…
இந்த ஜாலி நேர்காணலின் முழுநேர காணொளி
Kalki Online என்ற கல்கி குழும யூ ட்யூப் சானலில் 22-10-2021 (வெள்ளிக்கிழமை) அன்று பதிவேற்றப்படும்.

சிரிக்க… சிந்திக்க… சிநேகிக்க… ஷேர் செய்ய… தயாராகுங்க வாசகீஸ்!
பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

காலம் கெட்டுப்போச்சு… சிக்கலில் ஷாருக்கான் வாரிசு!

0
- ஜி.எஸ்.எஸ். தன் குழந்தைகளைப் பற்றி ஊடகங்களிடம் பலமுறை ஷாருக்கான் பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. ‘என் குழந்தைகள் மிகவும் ஒழுங்கானவர்கள். என்னைவிட கட்டுப்பாடு மிக்கவர்கள். நட்சத்திரங்களின் குழந்தைகள் என்றால் அவர்கள் சீர் கெட்டவர்களாக இருப்பார்கள் என்று...

ஷேமிங்! ஷேமிங்!

0
விழிப்புணர்வு விஷயம் - ஆர். மீனலதா, மும்பை ஷேம் ஆன் யு! ஷேம் ஆன் Her! ஷேம் ஆன் Him! ஷேம் ஆன் Them! விஞ்ஞான வளர்ச்சி அதிகமாகி, உலகம் சுருங்கிப் போன போதிலும், மக்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களை...

புண்ணியம்!

சிறுகதை : கீதா சீனிவாசன் ஓவியம் : சேகர் காலையிலிருந்தே கலையரசி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். குடும்ப நலனுக்காக அன்று சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தாள். குறிப்பாக, அந்த ஏரியாவில் பிரபலமான ஸ்வாமி ராமன்ஜி அதில்...

சுண்டி இழுக்கும் சுவையில் காரக் குழம்பு வகைகள்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி கேரட் காரக் குழம்பு தேவையானவை : சற்று நீளமான பெரிய கேரட் துண்டுகள், தேங்காய்த் துருவல், புளி, மஞ்சள் தூள், உப்பு - தேவைக்ககேற்ப. செய்முறை : வாணலியில் எண்ணெய்...

பொழுதைப் போக்க இந்த செலவு அவசியம்தானா? – மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

0
அன்று 2.15 ரூபாயில் தியேட்டரில் படம் பார்த்த நாம், இன்று 150 ரூபாய் செலவழிக்கிறோம். இக்காலகட்டத்துக்கு இந்த செலவு ஏற்புடையதா? இல்லையா? FB வாசகியர்களின் பதிவுகள்! வறுமையில் உழலும் நடுத்தர வர்க்கத்திற்கு இது சாத்தியம்...