சிறுகதை: இறுகப்பற்று!

Boy and Woman
Boy and WomanAI Image
Published on
Kalki Strip
Kalki Strip

ரகு குளித்து விட்டு இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு குளியலறையில் இருந்து தன் அறைக்கு வந்தபோது ரம்யா பேசுவது காதில் விழுந்தது.

“இல்லப்பா… வேணாம்… இன்னைக்கு வியாழக்கிழமை… நாங்க சாப்பிட மாட்டோம்…”

“பரவாயில்லை ஆண்டி! நீங்க வாங்கிக்கோங்க... அப்பா என்னை சண்டை போடுவாரு…”

“இல்லை தம்பி… வேணாம்…” என்று ரம்யா சொல்வது காதில் நன்றாக விழுந்தது.

வேஷ்டியை வேக வேகமாக கட்டிக் கொண்டு அறையில் இருந்து ரகு வெளியே வந்தபோது,

எதிரே ரம்யா கோபமாக, “வேணாம்னா போக வேண்டியதுதானே… இந்த வயசிலேயே என்ன பிடிவாதம்?" இரைந்தாள்.

“என்ன ரம்யா? ஏதாவது சோப்பு டப்பா விக்கிறவனா?”

“அட நீங்க ஒண்ணு… உங்க கூட வேலை செய்யற முஸ்தபா பையன் வந்தான்…”

“எதுக்கு?”

“ம்… இன்னைக்கு ரம்ஜான் இல்ல?”

“ஆமாம்… நீங்க சூடா சாப்பிடுவீங்கன்னு முஸ்தபா பிரியாணி கொடுத்து விட்டாராம்.”

ரகுவிற்கு புரிந்தது. முஸ்தபா குரல் நல்ல பரிச்சயம். ஆனால் அவருடைய மகன் வந்ததால் ரகுவின் கவனம் அவர்கள் உரையாடலில் இல்லை. ஏதோ சோப்பு விக்கிறவனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

“அடடே முஸ்தபா பையன் வந்தானா?”

“ஆமாம்… இன்னைக்கு வியாழக்கிழமை… நாங்க நான்வெஜ் சாப்பிட மாட்டோம்ன்னு சொல்றேன்…பிடிவாதமா… வாங்கிக்கோங்க ஆன்டின்னு அடம் பிடித்து நின்னான்... எனக்கு சரியான கடுப்பு…" என்று சொல்லி விட்டு சமையலறை புகுந்து கொண்டாள் ரம்யா.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com