புளி உப்புமா

புளி உப்புமா

பி.லலிதா, திருச்சி

தேவை:
அரிசி உடைத்தது -‌ கால் கிலோ.
புளிசிறிய எலுமிச்சம்பழம் அளவு.
தாளிக்க நல்லெண்ணெய்– 3 டேபிள் ஸ்பூன்.
காய்ந்த மிளகாய்– 4.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் கருவேப்பிலை.

செய்முறை:-
கால் கிலோ பச்சரிசியை கழுவி நீரை வடித்துவிட்டு துணியில் பரப்பி காயவைத்து, மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் உடைக்க வேண்டும். புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி ஒரு டம்ளர் என்றால் புளித்தண்ணீர் 3 டம்ளர் வேண்டும். ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, புளிக் கரைசலை ஊற்ற வேண்டும். சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட வேண்டும். புளிக்கரைசல் கொதித்து வரும்போது அரிசி குருணையை போட்டு கிளற வேண்டும்.

இதற்கிடையில் மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய குக்கர் அல்லது பிரஷர் பானை வைத்து தண்ணீர் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைக்கவும். அரிசி நொய் புளித் தண்ணீருடன் சேர்ந்து கொதித்து கெட்டியானதும், பிரஷர் பான் அல்லது குக்கரில் வைக்கும் பாத்திரத்தில் மாற்றி குக்கரில் வைத்து மூடி வெயிட் போட வேண்டும். இரண்டு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடம் கழித்து அணைத்து விட்டால் புளி உப்புமா பொலபொலவென்று சாஃப்டாக நன்கு வெந்து இருக்கும். மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி விட்டால் வாசனை தூக்கும். புளிசாதம் போல் சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள ஒன்றுமே தேவையில்லை என்றாலும், பொரித்த அப்பளம், வடகம் அல்லது சிப்ஸ் உடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
போன்9865210206.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com