ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது: காயமின்றி தப்பினார்!

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது: காயமின்றி தப்பினார்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு கார் மூலமாக செல்லும்போது, வழியில் கார் விபத்துக்குள்ளானது. அதில் ராதாகிருஷ்ணன் காயமின்றி உயிர் தப்பினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராதாகிருஷ்ணன் ஐஏஸ் இன்று திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக காரில் சென்றார். அப்போது திருச்சியில் அவரது கார் வேகமாகச் சென்றபோது, சாலையோரம் தடுப்புக் கம்பியில் கார் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக ராதாகிருஷ்ணன் காரிலிருந்து இறங்கி காயமின்றிஉ தப்பினார். இந்த கார் விபத்தில் டிரைவர் உட்பட காயமின்றி தப்பியதாக தகவல் தெரிவிக்கப் பட்டது. பின்னர் ராதாகிருஷ்ணன் வேறொருவரின் காரில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார் ராதாகிருஷ்ணன். இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com