ராஜ்மா சுண்டல்

ராஜ்மா சுண்டல்

Published on
ஆதிரை வேணுகோபால்.

தேவை:
சிவப்பு ராஜ்மா– 2 கப்

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு

கடுகு, எண்ணெய் ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

(வறுத்து அரைக்க): கடலைப்பருப்பு, தனியா, மிளகு தலா 4 டீஸ்பூன்.

செய்முறை
ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் போட்டு உப்பு
சேர்த்து 4 விசில் வேகவிடவும். பிறகு தண்ணீரை வடித்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அத்துடன் வெந்த ராஜ்மா, வறுத்து அரைத்த பொடி,கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். சத்தான சுவையான ராஜ்மா சுண்டல் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com