ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்கள் சேர்க்கை!

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்கள் சேர்க்கை!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியில் செயல்பட உள்ளது.

அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர்களை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கடந்த மாதம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர 500-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த நிலையில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.

இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு என்று 4 நவீன வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் தயாராக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும்  இம்மாதம் 16-ம் தேதிக்குப் பின் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், அதில் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வகுப்புகள் எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com