ரூ.14.50 கோடி செலவில் உருவான சென்னை கத்திப்பாரா சதுக்கம்: முதல்வர் ஸ்டாலின் திறப்பு!

ரூ.14.50 கோடி செலவில் உருவான சென்னை கத்திப்பாரா சதுக்கம்: முதல்வர் ஸ்டாலின் திறப்பு!
Published on

சென்னை கிண்டியிலுள்ள கத்திப்பாரா மேம்பாலத்தின்கீழ் ரூ.14.50 கோடியில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் மு..ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ் சதுக்கம் அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 5.38 லட்சம் சதுரஅடி பரப்பளவில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம், பேருந்து நிறுத்தம், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகள் இதில் உருவாக்கப்பட்டன. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதியில் இந்த பணிகள் நிறுத்தப் பட்டன. இந்நிலிஅயில் இப்பணிகளை கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதியன்று நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டால்லின், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதையடுத்து தற்போது 'கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்' அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com