சாலை விபத்தில் காலமான முன்னாள் மிஸ்.கேரளா: ரசிகர்கள் அதிர்ச்சி!

சாலை விபத்தில் காலமான முன்னாள் மிஸ்.கேரளா: ரசிகர்கள் அதிர்ச்சி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கேரளாவில் காரில் பயணித்தபோது சாலை விபத்தில் முன்னாள் கேரள அழகியும் அவரது தோழியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019-ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர். இதே அழகி போட்டியில் 2-ம் இடம்பிடித்த அஞ்சனா ஷாஜனுடன் அன்சி நேற்று எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் காரில் சென்றுள்ளனர். அப்போது இவர்களின் காருக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக அன்சி தன் காரை சட்டென்று திரும்பியுள்ளனர். இதனையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் அந்த கார் அப்பளம்போல் நொறுங்கி அன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே காரில் இவர்களுடன் பயணித்த மற்ற இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com