சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: பொய் வழக்கு பதிவு செய்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் சாட்சி!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: பொய் வழக்கு பதிவு செய்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் சாட்சி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்ஸ் இருவரும் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மறுநாள் காலையில் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

இதையடுத்து சாத்தான்ன்குளம் காவல்துறைமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் உட்பட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சாத்தானகுளம் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் சாட்சி கூறினார். அதில் அவர் தெரிவித்ததாவது:: சாத்தன்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் இருவரையும் போலீஸார் அடித்து துன்புறுத்தியதாகவும், இருவரும் உயிரிழந்த நிலையில் ஆவணங்களை மாற்றியதோடு, தந்தை மகன் மீது பொய் வழக்கை பதிவு செய்ததாகவும் சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் கூறினார். இதையடுத்து இந்த வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com