0,00 INR

No products in the cart.

சபரிமலை பதினெட்டுப் படிகளும்; தெய்வங்களும்!

எம்.வசந்தா

பரிமலையைச் சுற்றியுள்ள பதினெட்டு மலைகளும், சுவாமி ஐயப்பன் கோயிலில் உள்ள பதினெட்டுப் படிக்கு ஒப்புமையாகக் கூறப்படுகிறது. இந்தப் பதினெட்டுப் படிகளுக்குக் காவலாக கடூரவன் என்ற கடுத்த ஸ்வாமியும், கிருஷ்ணாபன் என்ற கருப்ப ஸ்வாமியும் இருப்பதாக, ஸ்ரீபூத நாத உபாக்யானம் கூறுகிறது.

கலியுகக் கடவுளாக ஐயப்பன் விளங்கும் காரணத்தால் சத்தியமே தேவதையாக உருவெடுத்து சபரிமலையில் பதினெட்டுப் படிகளாக விளங்குகின்றன. அதனால்தான் சபரிமலைக்கு இந்தத் தனிச்சிறப்பு. இருமுடி இல்லாமல் கூட ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனால், இந்தப் புனிதப் பதினெட்டுப் படியேற முடிவதில்லை.

மண்டல விரதம் என்பது பண்டைய காலத்தில் 56 நாட்களாகவே கூறப்பட்டது. கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையணிந்து, மகர விளக்கு தரிசனம் காண்பதே சபரிமலை யாத்திரையாகக் கொள்ளப்படும்.

பதினெட்டுப் படிகளில் வசிக்கும் தெய்வங்கள் :

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள பதினெட்டுப் படிகளும் தெய்வீகமானவை. ஒவ்வொரு படியிலும் ஒரு தெய்வம் வீற்றிருப்பதாக ஐதீகம்.

முதல் படி : நாகலட்சுமி சாஸ்தாவின் பரிவார தெய்வமான இவளுக்கு, குளத்துப்புழா அம்மன் கோயிலில் சன்னிதி உள்ளது.

இரண்டாம் படி : மகிஷாசுரமர்த்தினி துர்கை அம்சமான இவள், மகிஷாசுரனை வதம் செய்து உலகைக் காத்தவள்.

மூன்றாம் படி : அன்னபூர்ணா அன்னதானப் பிரபுவான மணிகண்டன் தமது பக்தர்களுக்கு உணவளித்தால் மகிழ்வார். அந்த அன்னத்துக்கு அதிபதி இவள்.

நான்காம் படி : காளி படைத்தல், அழித்தலுக்கு இவளே அதிபதி. தனது பக்தனுக்கு அநியாயம் நடந்தால் தட்டிக் கேட்பாள்.

ஐந்தாம் படி : கிருஷ்ணகாளி பயப்படச் செய்யும் உருவத்துடன் பக்தர்களின் பயத்தைப் போக்குபவள்.

ஆறாம் படி : சக்தி பைரவி பார்வதி தேவியின் உக்ர வடிவம் கொண்டவள். யட்சி என்றும் இவளுக்குப் பெயருண்டு. சபரிமலையில் இவளுக்கு சன்னிதி உள்ளது.

ஏழாம் படி : கார்த்தவீர்யாஜுனர் இவர் தனது குருநாதரான தத்தாத்ரேயரின் வழிகாட்டுதல்படி சாஸ்தா வழிபாட்டில் ஈடுபட்டவர்.

எட்டாம் படி : கிருஷ்ணாபன் கருப்பசாமி என்றும் பெயருண்டு. சாஸ்தாவின் பூதசேனைத் தலைவர் மற்றும் பாதுகாவலர்.

ஒன்பதாம் படி : இடும்பன் அசுர குலத்தைச் சேர்ந்த இவர், அவர்களின் தலைமைக் குருவாகவும் போர் வீரராகவும் திகழ்ந்தவர். முருகன் அருள் பெற்றவர்.

பத்தாம் படி : வேதாளம் பேய், பூதங்களின் தலைவர். சாஸ்தாவின் பரிவார தெய்வம்.

பதினொன்றாம் படி : நாகராஜா நாகங்களின் தலைவர். இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷம் விலகும்.

பன்னிரெண்டாம் படி : ரேணுகாதேவி சபரிமலை கோயிலைக் கட்டிய பரசுராமரின் தாய். ரேவண சித்தரிடம் ஐயப்ப மந்திரத்தை உபதேசமாகப் பெற்றவள்.

பதிமூன்றாம் படி : ஸ்வப்னவராகி ஐயப்ப பக்தர்களின் கனவில் தோன்றி, அவர்களுக்கு வழிகாட்டுபவள்.

பதினான்காம் படி : பிரத்யங்கரா தேவி காளியை விட உக்ர தெய்வம். வந்தவர்களைக் காப்பதில் தன்னிகரற்றவள்.

பதினைந்தாம் படி : பூமா தேவி வராகப் பெருமாளின் மனைவி. நெற்கதிர் ஏந்திய இவள், வளமான வாழ்வு தருபவள்.

பதினாறாம் படி : அகோரம் அழகான அஸ்திர தேவர். ஐயப்ப பக்தர்களுக்குப் பாதுகாப்பு தருபவர்.

பதினேழாம் படி : பாசுபதம் சிவபெருமானின் வில். இது பகைவர்களை அழிக்கும் சக்தி கொண்டது.

பதினெட்டாம் படி : ம்ருத்யுஞ்சயம் சிவனின் ஆயுதம். விரும்பியதை அடையச் செய்யும். உடல் நலம் கொடுக்கும். பக்தனை தெய்வ நிலைக்கு உயர்த்தும்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சூல வடிவில் துர்கை!

0
- டி.எம்.இரத்தினவேல் உத்தர்கண்ட் மாநிலத்தின் இயற்கையெழில் சூழ்ந்த பசுமையான பகுதி உத்தரகாசி. இத்திருத்தலத்தில் பாயும் புண்ணிய நதியான பாகீரதி நதிக்கரையில் அற்புதமாக அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில். தேவபுரி, தேவபூமி என புராணங்கள்...

பார்வதி மைந்தனுக்கு பாவாடை நைவேத்யம்!

0
- எஸ்.ஸ்ருதி சென்னை அருகே அமைந்த புகழ்மிக்க முருகப்பெருமான் திருத்தலம் திருப்போரூர். முருகன் அசுரர்களோடு மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் புரிந்து கன்மத்தை அழித்தார்....

மாமணிக் கோயிலில் மாதவப் பெருமாள்!

0
- இரா.சுரேஷ் நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சை மாமணி கோயில். தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் அருள்மிகு ஶ்ரீ வீரநரசிம்ம சுவாமி ஆலயம், நீலமேகப் பெருமாள் ஆலயம் மற்றும் மணிக்குன்ற பெருமாள் ஆலயம்...

அருங்கலைகளின் ஆசான் அகத்தீஸ்வரர்!

0
- பழங்காமூர் மோ கணேஷ் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே அமைந்துள்ளது புரிசை திருத்தலம். அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடைய இந்தத் தலத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ‘தென்னூர் கைம்மைத் திருச்சுழி...

கதவுகளே காணாத சனி சிக்னாப்பூர்!

0
- லதானந்த் ஓர் ஊரில் எந்த வீட்டுக்கும் கதவுகளே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்தானே! கதவுகளே இல்லாத அந்த ஊரில் களவுகளே நடைபெறுவதில்லை என்பதும் ஆச்சரியம்தானே! அப்படிப்பட்ட ஓர் ஊர் இருக்கிறது. அதுதான் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்...