சபரிமலை ஶ்ரீஐயப்பன் ஆலயம்: இன்று முதல் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்ய அனுமதி!

சபரிமலை ஶ்ரீஐயப்பன் ஆலயம்: இன்று முதல் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்ய அனுமதி!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

தற்போது நவம்பர் 16 முதல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தினசரி 40000 பக்தர்களும், உடனடி முன்பதிவு அடிப்படையில் 5000 பக்தர்களும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இதனால் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

தற்போது பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க சபரிமலையில் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி அளித்துள்ளது. மேலும் எருமேலியிலிருந்து பாரம்பரிய பாதையான சபரிமலைக்கு செல்லும் 38 கி.மீ தொலைவு உள்ள பெருவழிபாதை திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இது தவிர தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கையை தினமும் 60,000 ஆக உயர்த்தவும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com