சாபுதானா சுண்டல்

சாபுதானா சுண்டல்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
–ஆதிரை வேணுகோபால்.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி -1 கப்.

குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது).

தேங்காய் துருவல் – சிறிதளவு

பச்சை மிளகாய் – 2

உளுத்தம்பருப்பு +கடலைப்பருப்பு –சிறிதளவு

கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு.

செய்முறை
ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்கு வடித்து விட வடித்துவிடவும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும் அத்துடன் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறி பொடியாக நறுக்கிய குடமிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். விருப்பப்பட்டால் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

logo
Kalki Online
kalkionline.com