0,00 INR

No products in the cart.

சகுனம் சொல்லும் சேதி!

கவிதா பாலாஜிகணேஷ்

குங்குமம் கை தவறி கொட்டி விட்டாலும், பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபம் தானாக அணைந்து விட்டாலும், கோயில் கூட்ட நெரிசலில் நாம் வாங்கும் பிரசாதம் கைதவறி கீழே விழுந்துவிட்டாலும், கழுத்தில் இருந்து தாலி கழண்டு கீழே விழுந்து விட்டாலும் பலரது மனதில், ‘இது என்ன அபசகுனம்’ என்ற பதற்றம் ஏற்படும். ‘இதுபோன்ற நிகழ்வுகள் நம்முடைய அஜாக்கிரதையால் நிகழ்வதே தவிர, இவை அபசகுனம் கிடையாது. தாலி கழண்டு விழுவது, மெட்டி கழண்டு விழுந்து மாயமாவதால் ஆபத்து எதுவும் நடக்காது. மாறாக, மாங்கல்ய பலம்தான் அதிகமாகும்’ என்கின்றனர் பெரியவர்கள். நம்மை மீறி நடக்கும் சில செயல்களையே நாம் சகுனமாகக் கருத வேண்டும். உதாரணத்திற்கு, நாம் வெளியில் கிளம்பும்போது வாசலில் வந்து அண்ணாந்து பார்க்கையில் கண்ணில் கருடன் தென்பட்டால் அது நல்ல சகுனம். இது, நம்மை மீறிய விஷயம். இதுபோல் நடக்கும் நிகழ்வுகளையே சகுனமாகக் கருத வேண்டும்.

கிரக தோஷம் நீங்கும் : மாங்கல்யம் கழண்டு விழுதல், மெட்டி, திருமண மோதிரம் காணாமல் போகுதல் போன்ற சகுனம் நல்லதாகும். இதனால் மாங்கல்ய பலம் அதிகமாகும். வீட்டு பூஜை அறையில் காமாட்சி விளக்கு தவறுதல், பாம்பு கடிப்பது போல் கனவு காணுதல், பாம்பு நம் மேல் ஏறுதல், குங்குமம், விபூதி தவறுதல், பெரிய விபத்தில் இருந்து சிறு காயத்துடன் தப்பிப் பிழைத்தல் போன்றவைகளால் கிரக தோஷங்கள் நம்மை விட்டு விலகுவதற்கான அறிகுறிகளாகும்.
தேங்காய் அழுகல் : பூஜைக்கு வீட்டிலோ, கோயிலிலோ தேங்காய் உடைக்கும்போது அது அழுகிய நிலையில் இருந்தால் அதை நினைத்து கலங்க வேண்டாம். அது நல்ல அறிகுறி என்றும், அவர்களைப் பிடித்து இருக்கும் தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவை அகலப் போகிறது எனவும் கொள்ள வேண்டும்.

தேங்காயில் பூ இருப்பது : சாமிக்கு உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் அவர்களின் வீட்டில் ஏதோ ஒரு சுப காரியம் நடக்கப்போகிறது என்று பொருள். அதேபோல், தேங்காய் உடைக்கும்போது அதில் பூ இருந்தால், பண வரவு, நல்ல லாபம், எதிர்பாராத விஷயங்கள் நடைபெறப்போவதற்கான சகுனமாக அதைக் கருத வேண்டும்.
கை வளையல் முக்கியம் : பெண்கள் மாலையில் விளக்கு வைத்தவுடன் அழக் கூடாது, கை வளையல்களைக் கழற்றக் கூடாது, காலை ஆட்டக் கூடாது, மல்லாந்து படுக்கக் கூடாது, திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே சென்றால், மாலைக்குள் வீடு திரும்பி விட வேண்டும், பிறர் வீடுகளில் தங்கக் கூடாது என்பது குடும்பத்திற்கு நன்மை செய்யும் என நம்பப்படும் ஐதீகம்.

தீபம் ஏற்றுவது : வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. குறைந்தது இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது. சுவாமியிடம் ஏற்றிய தீபத்தை வாயினால் ஊதி அணைக்கக் கூடாது. பூக்களை வைத்துதான் தீபத்தை அமர்த்த வேண்டும்.

சிகை அலங்காரம் முக்கியம் : கோயிலுக்குச் செல்லும்போதும், பூஜை செய்யும்போதும் பெண்கள் தலை முடியைத் அலைபாய விடாமல், நுனி முடிச்சுப் போட வேண்டும். அதேபோல், துளசி, வில்வம் இவற்றை செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பெளர்ணமி, துவாதசி, சாயங்காலம், இரவு நேரம் பறிக்கக் கூடாது. வீட்டில் பூஜை செய்யும்போது பூத்தட்டை மடியில் வைத்து, பூவெடுத்து சுவாமிக்கு பூஜை செய்யக் கூடாது.

கல் உப்பு மகிமை : வீட்டை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் துடைக்கக் கூடாது. மற்ற நாட்களிலேயே துடைக்க வேண்டும். அப்படித் துடைக்கும்போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைத்தால், கண் திருஷ்டி குறையும்.

பணம் சேரும் திசை : வீட்டில் இருக்கும் பணப்பெட்டியை தென்மேற்கு திசையில் கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ வைக்கலாம். அல்லது வடமேற்கு திசையில் கிழக்கு பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் அனுபவசாலிகள்.

Kavithabalajiganesh B
பா. கவிதாபாலாஜிகணேஷ் " கல்கி குழுமம்தான் என் எழுத்துக்கு முதன்முதலாக அங்கீகாரம் கொடுத்தது நான் அதை நன்றியுடன் என்றும் நினைக்கிறேன் " என்று கூறும் கவிதா, பாலாஜி கணேஷ் அவர்களின் மனைவி, எனக்கு 1999 திருமணம் நடந்தது. திருமணமாகி வந்த உடன் தான் என் கணவர் ஒரு எழுத்தாளர் என்பதே எனக்கு தெரியும். அவர்தான் என்னை ஊக்குவித்து, என்னையும் எழுதும்படி உற்சாகப்படுத்தியவர்’’ என்று பெருமிதத்துடன் பேசும் கவிதா, எதிர்காலத்தில் இன்னும் நிறைய எழுதப் போகிறாராம்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

மோட்சக் கதவு திறக்குமா?

0
- கே.அம்புஜவல்லி பக்தர் ஒருவர் மனதில், ‘தனது பக்தி தனக்கு மோட்சத்தைப் பெற்றுத் தருமா?’ என்று நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்தது. அதனால் தாம் சந்திக்கும் அனைவரிடமும், “எனக்கு மோட்சம் கிடைக்குமா” என்று...

உயிரோடிருந்தால் சுகிக்கலாம்!

- ராஜி ரகுநாதன் ‘ஜீவன் பத்ராணி பஸ்யந்து’ என்கிறது வால்மீகி ராமாயணம். ‘உயிரோடிருந்தால் சுகங்களைப் பார்க்கலாம்’ என்பது இதன் பொருள். ஸ்ரீமத் ராமாயணம் சுந்தர காண்டத்திலுள்ள வாக்கியம் இது. அவநம்பிக்கையையும் ஊக்கமின்மையையும் நம் சனாதன தர்மம்...

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

0
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை...

​இடது கண் ஏன் அழுதது?

0
இறைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம்...