சமைப்பது தியானத்துக்கு சமம்! டிவி பிரபலம் யோகாம்பாள் சுந்தர்.

சமைப்பது தியானத்துக்கு சமம்!  டிவி பிரபலம் யோகாம்பாள் சுந்தர்.

பேட்டி: சாருலதா ராஜகோபால்.

புதுயுகம் டிவி சேனல் மற்ரும் யுடியூபில் சமையல் கலையில் பிரபலமாக விளங்குபவர் யோகாம்பாள் சுந்தர். தீபாவளை பண்டிகையை முன்னிட்டு அவரை சந்தித்துப் பேசினோம். கல்கி ஆன்லைன் நேயர்களுக்காக யோகாம்பாள் இனிப்பு மற்றும் காரம் பலகாரம் ரெசிப்பிக்களையும் பகிர்ந்து கொண்டார். இனி அவருடன் பேசுவோம்,,

பேட்டியாளருடன் யோகாம்பாள்..

உங்களுக்கு எப்போது சமையலில் ஈடுபாடு வந்தது?

என் 17-வது வயதில் திருமணம் செய்து கொண்ட பின்னர் சமைக்கத் துவங்கினேன். கணவர் மற்றும் குடும்பத்தில் சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்ததைப் பார்த்து நான் நன்றாக சுவையாக சமைக்க கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். என் கணவர் சுந்தர், எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரும் போது ஒரே விதமாக செய்தால் நன்றாக இராது என விதம்விதமாக சமைக்க கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் வந்தது

பலகார பட்சண வகைகள் செய்யக் கற்றது எப்போது?

என் பாட்டி மற்றும் மாமியார் சொல்லித் தந்ததைதான் பாரம்பரியமாக இன்று வரை கடைபிடிக்கிறேன். ஒவ்வொரு வகை பட்சணத்துக்கும் என்னென்ன பொருட்களை எவ்வாறு சேர்த்து எப்படி செய்ய வேண்டும் என அவர்களதான் கற்றுத் தந்தனர்

புதுயுகம் டிவியில் உங்கள் ப்ரொக்ராம் சக்கைபோடு போடுகிறதே.. அதில் நீங்கள் கலந்து கொண்டது எப்படி?

புதுயுகம் சானலில் வேலை செய்யும் ஒரு நண்பர் "அழைக்கலாம் சமைக்கலாம்" என்ற நிகழ்ச்சிக்காக கேள்வி பதில் போன்ற அமைப்பிற்கு என்னை பங்கு பெறக் கேட்டார்அப்போதெல்லாம் என் உருவம் குறித்து ஒரு மனக்குறை இருந்ததால் தயங்கினேன். மேலும் என் பேச்சுவழக்கமும் ஒரு குறிப்பிட்ட சாரார் பேசுவது போல் இருக்கும், அதையெல்லாம் என்னால் மாற்றிக் கொள்ள இயலாது என சொன்னேன். அதன் பிறகும் அந்த சேனலில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து சமையல் நேரமும் ஒதுக்கிக் கொடுத்தனர். அந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 8-வது சூடுபிடிக்க ஆரம்பித்தது. இன்று பலரும் விரும்பிப் பார்க்கும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி யாக உருமாறியது அனக்கு மிகவும் சந்தோஷம்.

அது காமாட்சியின் கருணை என்றுதான் நினைக்கிறேன். 2000 பேருக்கு தெரிந்த என்னை இன்று 2 லட்சம் (ஏன்.. 20 லட்சம் பேர்) பேருக்கு தெரிகிறது என்றால் அது "புதுயுகம்" தந்த பரிசு. எப்போதும் வீட்டிலிருந்து கிளம்பும் போது காமாட்சியம்மன் முன்பு விளக்கேற்றி வைப்பேன். '' இந்தக் கைகள் மூலம் எதை சமைத்து உலகிற்கு காண்பிக்க எண்ணுகிறாயோ அதை செய்துகொள்'' என பிரார்த்திப்பேன். அதனால் நிகழ்ச்சிக்காக சமைத்தபின் அதை சுவை பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை.

யூடியூப் சானல் தொடங்கியது எப்படி?

புதுயுகம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே என் மகன் என்னிடம் இதுபற்றி பேசினார். ஆனால் பலர் யூடியூபில் சமைக்கும்போது, நம்முடையதை யார் பார்ப்பர்கள் எனக் கருதினேன். ,ஆனால் சேனல் மூலம் பிரபலமான பிறகு வேறொரு விஷயம் தோன்றியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஒருகட்டத்தில் அழிந்துபோகலாம், நம்மிடம் ஒரு பதிவு இருந்தால், நம் குடும்பம் மற்றும் உறவினர்கள் தலைமுறை கடந்து உபயோகிக்க முடியும் என தோன்றியது. உடனே யூடியூப் சேனல் ஆரம்பித்தோம். புதிதாக மணமான தம்பதியருக்கு உன் வீடியோ மிகவும் உதவியாக இருக்கும் என என் மகன் அடிக்கடி கூறுவார். என்னால் முடிந்தவரை எனக்குத் தெரிந்த அனைத்து சமையல் குறிப்புகளையும் பதிவு செய்ய என் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் முயற்சி செய்து வருகிறேன்

மருத்துவர் அறிவுரை யின்படி 10 நிமிடத்திற்கு மேல் நிற்கக்கூடாது என்ற நிலையிலும் அதை அனுசரித்து என் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் புதுயுகம் தொலைக்காட்சிக்கும் ,உட்கார்ந்த நிலையில் சமைத்துக் காண்பித்தாலும் அதையும் பார்த்து ஊக்குவிக்கும் மக்களும் என் இன்றைய நிலைக்கு காரணமாக கொள்ளலாம். முன்பு உருவம் குறித்து எனக்கு இருந்த தயக்கம் ,சானல் மற்றும் மக்கள் ஆதரவு பெற்று பிரபலமான நிலையில் காணாமல் போய் விட்டது. யூடியூபில்  வீடியோ எடுப்பதை எடிட் செய்து பதிவேற்றுவது என் மகன் தான்.

இன்றைய ளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

இப்போது ஆண் பெண் எல்லோருக்கும் யூடியூப் பார்த்து சமைக்கும் எண்ணம் அதிகரித்துவிட்டது. தியானம் போல சமைப்பது மிகவும் நல்லது. நிச்சயமாக சமைப்பது தியானத்துக்கு சமம். நம் கையால் குடும்பத்திற்கு சமைத்துப் போட்டு அவர்கள் விரும்பி சப்பிடுவதைக் காண்பது இனிய அனுபவம்.

யூடியூப் சானலில் ஆரம்பித்து ஆனால் பிரபலம் ஆகாதவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

யாருடைய உழைப்பும் வீண் போகாது. நாம் விதை போடுகிறோம். சிலருக்கு உடனே பலன் கிடைக்கலாம். சிலருக்கு தாமதமாகலாம். ஆனால், ஒவ்வொரு யூடியூப் பதிவும் யாரோ ஒருவருக்கு நிச்சயம் பலன் தரும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு சொல்லி முடித்த யோகாம்பாள், கல்கி ஆன்லைன் நேயர்களுக்காக ஈசியாக அதெசமயம் சுவையாக செய்யக்கூடிய மில்க் பவுடர் பர்பி மற்றும் காரசேவு ரெசிப்பிக்களை அளித்தாr…

பால் பவுடர் பர்பி

தேவையானவை:

காய்ச்சிய பால் : 100 மிலி.

பால்பவுடர் – 200 கி.

தூளாக்கிய சர்க்கரைப் பொடி 100 கி.

நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்.

சீவிய பாதம், பிஸ்தா, முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்.

வனிலா எஸன்ஸ் (தேவைப்பட்டால்) – 2 துளிகள்.

 செய்முறை: அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை விட்டு பாலையும் அத்துடன் விட்டு நன்கு கலக்கி  2 ஒன்றாக கலந்த பின் (பால் மிதமான சூடு இருக்க வேண்டும். அதிக சூடு இருந்தால் பால் பவுடர் போட்டதும் கட்டிகட்டியாக ஆகி விடும். ) பால் பவுடர் சேர்த்து நன்கு 10 நிமிடம் கிளறினால் கோவாவை போல் திரண்டு வரும். அடுப்பை அணைத்து 2 நிமிடம் கழித்து அதில் சர்க்கரை பொடி, ஏலக்காய்தூள், எஸன்ஸ் விட்டு கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமன் படுத்தவும். அதன்மேல் முந்திரி, பாதம் துருவல் தூவி 15 நி கழித்து வில்லைகள் போட்டு எடுத்தால் சுவையான மிருதுவான மில்க் பர்பி தயார்.

காரா சேவ்

தேவையானவை

கடலைமாவு – 1/2 கிலோ ( 2.கப்

 அரிசிமாவு  – 200 கிராம் ( 1கப் )

 மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்

 காரப்பொடி   தேவைக்கு ஏற்ப்ப

 உப்பு தேவைக்கு ஏற்ப 

நெய் அல்லது வெண்ணை 2 டேபிள் ஸ்பூன்

சூடாக காய்ந்த எண்ணை 2 டேபிள்ஸ்பூன் 

எண்ணை பொறிப்பதற்கு.

செய்முறை: பொறிப்பதற்கான எண்ணை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக போட்டு நன்கு கலந்து பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு மிருதுவாக பிசையவும். வாணலியில் எண்ணை வைத்து காய்ந்ததும், காராசேவ் கட்டை அல்லது தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு சூடான எண்ணையில் மாவை பிழியவும். காராசேவை நன்கு ரெண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவிட்டு ஓசை அடங்கிய பின் எடுத்துகொள்ளவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com