சமையல் எரிவாயு சிலிண்டர் எடை குறைப்பு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர் எடை குறைப்பு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

நாட்டில் இப்போது நடைமுறையிலுள்ள 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பெண்கள் கையாளவதில் சிரமங்கள் உள்ளன. அதைக் கருத்தில்கொண்டு கேஸ் சிலிண்டர் எடையைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு வழிகளை பரிசீலித்து வருகிறது.

சிலிண்டரின் எடை குறைவாக இருந்தால் பெண்கள் கையாள்வது எளிதாக இருக்கும். அப்படி சிலிண்டர் எடை குறைந்தால், அதன் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.

எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் ஒருவர் கடந்த வாரம் கால் தடுமாறி விழுந்தபோது, அவர் மீது சிலிண்டர் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். எனவே தான் இந்த முடிவு மத்திய அரசு எடுத்துள்ளது.

எடை அதிகமுள்ள சிலிண்டர்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சிலிண்டர்களை பெண்கள் கையாள்வதை சுலபமாக்க, அதன் எடையை குறைக்க பரிசீலித்து வருகிறோம் என தெரிவித்தார். 14.5 கிலோ எடையை 5 கிலோ வரை குறைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com