0,00 INR

No products in the cart.

சாம்பிராணி தூபக் கடாட்சம்!

.எஸ்.கோவிந்தராஜன்

சாம்பிராணி புகை போடுவது என்பது, வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையாகக் கருதப்படுகிறது. சாம்பிராணி புகையானது, ஹோமத்தில் இருந்து வரும் புகைக்கு இணையான பலன்களைக் கொடுக்கும். அதனால்தான் நமது முன்னோர்கள் தொன்றுதொட்டு வீடுகளிலும் அவர்கள் தொழில் செய்யும் இடங்களிலும் சாம்பிராணி புகை போட்டு அந்த இடத்தையே தெய்வக் கடாட்சத்துடன் வைத்திருந்தார்கள்.

வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் சாம்பிராணி புகை போடுவது, செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும். இந்தப் புகையை நன்கு புகைக்க விட்டு, வீடு முழுவதும் மூலை முடுக்குகளிலெல்லாம் காண்பிக்க வேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் ஒழியும்.

இனி, சாம்பிராணி புகையில் எந்தப் பொருட்களைப் போட்டால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

lசாம்பிராணி புகையில் காய்ந்த வேப்பிலைத் தழைகளைப் போட்டு தூபம் இடும்பொழுது, வீட்டில் இருக்கும் கொசு தொல்லை நீங்கும். மேலும், நோய் நொடிகளிலிருந்து நல்ல நிவாரணமும் பெற முடியும்.

lஅதீத சக்திகளைக் கொண்டுள்ள சாம்பிராணி தூபத்தில் அகில் போட்டு புகை மூட்டினால் அதிலிருந்து வரும் நறுமணத்தை குழந்தைப் பேறு இல்லாதவர்கள் சுவாசிக்கும்பொழுது, அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் விரைவில் உண்டாகும்.

lசாம்பிராணி தூபத்தில் வெண் கடுகு போட்டு வெடிக்க விட்டால், வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் அனைத்தும் நீங்கி, உங்களைச் சூழ்ந்துள்ள பகைகளும், எதிரிகளின் சூழ்ச்சிகளும் முறியடிக்கப்படும்.

lசாம்பிராணியுடன் வெட்டிவேர், அருகம்புல் ஆகியவற்றைக் காய வைத்து தூபம் போட்டால் தோஷங்கள் யாவும் விலகி, சுப காரியங்கள் மற்றும் காரிய சித்தி உண்டாகும். நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய அற்புத சக்திகள் உருவாகும்.

lசாம்பிராணியுடன் தூதுவளை போட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தூபமிட, எப்பேர்ப்பட்ட குலதெய்வக் குற்றங்களும் நீங்கி, தெய்வ கடாட்சம் ஏற்படும். அதோடு, உங்கள் குலதெய்வத்தை உங்கள் வீட்டுக்கும் அழைத்து வர முடியும்.

lசாம்பிராணி தூபத்தில் ஜவ்வாது மற்றும் சந்தனம் ஆகியப் பொருட்களைப் போட்டு புகை மூட்டினால், நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். வீட்டில் லட்சுமி கடாட்சமும் நிறையும்.சாம்பிராணி தூபத்துடன் காய்ந்த துளசி இலைகளைப் போடும் புகை மூட்டும்போது, காரியத் தடைகள் யாவும் விலகி, வெற்றி கிடைக்கும்.

lசாம்பிராணியுடன் நன்னாரி வேர், மருதாணி இலை, நாய்க்கடுகு, கரிசலாங்கண்ணி பொடி ஆகியவற்றைப் போட்டு தூபமிடும்பொழுது, உடன் இருந்து துரோகம் இழைப்பவர்களை நெருங்க விடாமல் தடுக்கும். மேலும், சகல ஐஸ்வர்யங்களும், பெரிய மனிதர்களின் ஆசீர்வாதமும், மகாலட்சுமியின் அருட்பார்வையும் உங்கள் மீது பரிபூரணமாக விழும்.

ந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரை சாம்பிராணி புகையை வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைக்கும் காண்பிப்பது உண்டு. பிறந்த குழந்தைக்கு மிதமான சாம்பிராணிப் புகையை தலைப்பகுதிக்குக் காண்பிக்கும்பொழுது தலையில் நீர் கோர்க்காமல், நோய் நொடிகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்கும். முக்கியமாக, ரசாயனக் கலவைகள் சேர்க்கப்பட்ட சாம்பிராணிகளைத் தவிர்த்து, தரம் மற்றும் இயற்கையான சாம்பிராணிகளை உபயோகித்து, கடவுள் கடாட்சத்தோடு, உடல் நலத்தையும் பேணுவோம்.

ஏ.எஸ். கோவிந்தராஜன்
திரு. கோவிந்தராஜன், பூர்வீகம் கும்பகோணம். 1996ல் சென்னைக்கு மாற்றம். தனியார் நிறுவனங்களில் பணி. கல்கி, ஜெயகாந்தன், ஜானகிராமன், பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். தனது கல்லூரி நாட்கள் முதலே, ஜோக்ஸ், துணுக்குச் செய்திகள், சிறு கட்டுரைகள், கதைகள் எழுதி வருபவர். சிறந்த மிருதங்க கலைஞரும் கூட!.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

கண் திருஷ்டியை விலக்கும் தாந்த்ரீக பரிகாரம்!

- எம்.ராஜதிலகா ‘கல் அடி பட்டாலும் படலாம்; கண் திருஷ்டி படவே கூடாது’ என்று பெரியோர்கள் சொல்வார்கள். கணவன், மனைவி சந்தோஷமாக வெளியே சென்று வருவோம். சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்வோம்....

ஆடித் திங்கள் பரிகாரமும் வழிபாடும்!

0
- அபர்ணா சுப்ரமணியம் நோய் நீக்கும் தாள்கறி நிவேதனம்! கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் தண்ணீர்முக்கம் பஞ்சாயத்தில் அமைந்த மருத்தோர் வட்டம் என்ற ஊரில் சங்கு சக்ரதாரியாக அமிர்தகும்பம் கையிலேந்தியவாறு காட்சியளிக்கும் தன்வந்த்ரி மூர்த்தி கோயில்...

இல்லறம் இனிமையாக சம்மோஹன கிருஷ்ணர் வழிபாடு!

- ஆர்.வி.ஆர். சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் போல, ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வக் கோலம் சம்மோஹன கிருஷ்ணர் திருவுருவம். நாமக்கல் மாவட்டம், மோஹனூரில் ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தில் சம்மோஹன கிருஷ்ணர்...

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

தச சாந்தி கர்மாக்கள்!

0
- ச.தண்டபாணி இந்து சமயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் பிறந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் (நூறு வயது வரை வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால்) செய்துகொள்ள வேண்டிய சாந்தி கர்மாக்கள் என்னென்ன என்பதைக் குறித்துக் காண்போம். பொதுவாக,...