0,00 INR

No products in the cart.

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை அறிவோம். அதுபோல, ஒவ்வொரு சங்கராந்தியையும் ஒவ்வொரு பெயரால் அழைத்து, அன்று செய்ய வேண்டிய பூஜைகள், தானங்கள் பற்றி முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர்.

சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு பெயரைப் பெறுகிறான். அவை :
தை விஷ்ணு, மாசி வருணன், பங்குனி பூஜா, சித்திரை அம்சுமான், வைகாசி தாதா, ஆனி சவிதா, ஆடி ஹர்யச்வன், ஆவணி விஸ்வான், புரட்டாசி பகன், ஐப்பசி பர்ஜன்யன், கார்த்திகை துவஷ்டா, மார்கழி மித்திரன் என பன்னிரெண்டு பெயர்களைப் பெற்று சூரியன் ஒளி வீசி விளங்குகிறான். இனி, பன்னிரு தமிழ் மாத சங்கராந்தி வழிபாடுகளையும் பலன்களையும் காண்போம்.

l சித்திரை : சூரியன் மேஷ ராசியில் நுழையும் இந்த சங்கராந்தி தினம், ‘தான்ய சங்கராந்தி’ என அழைக்கப்படுகிறது. இன்று சூரிய பகவானை பூஜித்து, தானிய வகைகளை தானம் செய்ய வேண்டும். இதனால் ஆயிரம் யாகங்கள் செய்த பலன் கிட்டும்.

l வைகாசி : ரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. ‘தாம்பூல சங்கராந்தி’ எனப்படும் இன்று, சூரியனுக்கு அர்ச்சனை செய்து, வெற்றிலை பாக்கு, பழம், இயன்ற தட்சணையை ஒரு மண் பாத்திரத்தில் வைத்து, வாசனைப் பொருட்களுடன் வயதான தம்பதியருக்கு தானம் அளித்தால் நற்பலன் பெருகும்.

l ஆனி : மிதுன ராசிக்கு சூரிய பகவான் இடம்பெயரும் இந்த நேரம், ‘மனோரத சங்கராந்தி’ எனப்படுகிறது. இன்று ஒரு குடத்தில் வெல்லத்தை நிரப்பி, வேதம் பயின்ற பெரியோருக்கு உணவளித்து அந்த வெல்லக் குடத்தை தானமளித்தால் மனதில் எண்ணிய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

l ஆடி : சூரிய பகவான் கடக ராசியில் பிரவேசிக்கும் நாளில், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து, முன்னோர்களை நினைத்து வணங்க வேண்டும். ‘அசோக சங்கராந்தி’ எனப்படும் இந்நாளில் ஆதித்தனை வணங்க, சோகங்கள் நாசமாகும்.

l ஆவணி : சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இந்த, ‘ரூப சங்கராந்தி’ நாளில், பொன் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் நெய் நிரப்பி, சூரியனை வணங்கி அந்தணர்க்குத் தானமளித்தால் நோய்கள் நீங்கும். தோற்றப் பொலிவு உண்டாகும்.

l புரட்டாசி : கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும், ‘தேஜ சங்கராந்தி’ எனப்படும் நாளில், நெல், அரிசி போன்றவற்றின் மீது கலசம் வைத்து, அதில் சூரியனை எழுந்தருளச் செய்து, மோதகம் நிவேதித்தால் காரியத் தடைகள் அகலும்.

l ஐப்பசி : துலாம் ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் இக்காலம், ‘ஆயுள் சங்கராந்தி’ எனப் போற்றப்படுகிறது. இன்று கும்பத்தில் பசுவின் பாலோடு வெண்ணை சேர்த்து நிரப்பி வேதியர்க்கு தானமளிக்க ஆயுள் கூடும்.

l கார்த்திகை : சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் இக்காலம், ‘சௌபாக்கிய சங்கராந்தி’ எனப்படும். இந்நாளில் சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து சிவப்பு நிறத் துணி சாத்தி, உப்பை தானம் செய்தால் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

l மார்கழி : ‘தனுஷ் சங்கராந்தி’ எனப்படும் மார்கழி மாத சங்கராந்தியில் ஒரு கலசத்தில் தீர்த்தம் நிரப்பி, சூரிய பகவானின் பிரதிமையை அதில் போட்டு பூஜித்து தானம் அளிப்பதும், எளியவர்களுக்கு இயன்ற அளவு உணவு அளிப்பதும் கிரக தோஷங்களை நீக்கும்.

l தை : மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும், ‘மகர சங்கராந்தி’ மற்ற சங்கராந்திகளை விட முக்கியமானது. தேவர்களின் விடியற்காலை நேரமான இம்மாதம் முழுதும் இஷ்ட தெய்வ ஆராதனை செய்தால் மகத்தான புண்ணியமும், செல்வ வளமும் சேரும்.

l மாசி : கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும், ‘லவண சங்கராந்தி’யில் சூரியனை பூஜித்தால் மோட்சம் கிட்டும்.

l பங்குனி : சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் நாள், ‘போக சங்கராந்தி’ ஆகும். இம்மாத ஆரம்பத்திலும், முடிவிலும் சூரிய பூஜை செய்தால் தன, தான்ய அபிவிருத்தி ஏற்படும்.

ருடம் முழுவதுமான இந்த வழிபாட்டோடு, ஒவ்வொரு சங்கராந்தியன்றும் ஏழை, எளியோருக்கு இயன்ற அளவு தான, தர்மம் செய்வது சூரிய பகவானின் அருளை நிறைவாகப் பெற்றுத் தரும்.

தொகுப்பு : எஸ்.ஸ்ருதி, சென்னை

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​இடது கண் ஏன் அழுதது?

0
இறைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம்...

​ஸ்ரீ அனுமத் ஜயந்தி துளிகள்

0
மாதங்களில் சிறந்த மார்கழியில், அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவர் ஸ்ரீ ஆஞ்சனேயர். இத்திருநாள் அனுமத் ஜயந்தி நாளாக நாடெங்கும் வழிபடப்படுகிறது. இனி, அனுமன் குறித்த சில...

வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!

- நெய்வாசல் நெடுஞ்செழியன் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் அருள்மிகு காவியங்கன்னி உடனுறை வெள்ளடைநாதர் திருக்கோயில். தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது பதிமூன்றாவதாகும். ஆதியில் இத்தலம் சுவேதவிருஷபுரம்,...

சாம்பிராணி தூபக் கடாட்சம்!

- ஏ.எஸ்.கோவிந்தராஜன் சாம்பிராணி புகை போடுவது என்பது, வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையாகக் கருதப்படுகிறது. சாம்பிராணி புகையானது, ஹோமத்தில் இருந்து வரும் புகைக்கு இணையான பலன்களைக் கொடுக்கும். அதனால்தான் நமது முன்னோர்கள் தொன்றுதொட்டு வீடுகளிலும்...