0,00 INR

No products in the cart.

​சாந்தம் அருளும் சாம்பா தசமி!

P.பாலகிருஷ்ணன்

மது இந்தியக் கலாசாரத்தில் கோகுலாஷ்டமி, காலபைரவாஷ்டமி, விஜயதசமி, சாம்பா தசமி போன்ற சில விசேஷங்கள், திதிகளின் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. தை மாதம் பிறக்கும் மகர சங்கராந்தி நன்னாளை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விதமாகக் கொண்டாடுகின்றன. அவ்வகையில், வங்காள விரிகுடா கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ளதும், கொனார்க் சூரியனார் கோயிலுக்குப் புகழ் பெற்றதுமான ஒடிஷா மாநிலத்தில் அவ்விழா, அடுத்தடுத்து இருவேறு நாட்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை பொங்கலையொட்டி வரும் தசமி திதியை, ‘சாம்பா தசமி’ என இம்மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். ஒடிஷாவுக்கே உரிய பிரத்யேக விழாவான இது, ‘சாம்பா தசமி’ விரதம் எனவும் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு இந்த விரதம் ஜனவரி 12ம் தேதி நிகழ்கிறது.

ந்த விரதத்துக்குக் காரணகர்த்தாவான சாம்பன் வேறு யாருமல்ல;
ஸ்ரீ கிருஷ்ணரின் மனதுக்கினிய எட்டு ராணிகளில் ஒருவரான ஜாம்பவானின் புத்திரி ஜாம்பவதியின் மகன்தான் இவன். சாம்பசிவனின் அருளால் பிறந்ததால் இவன், ‘சாம்பன்’ எனப் பெயர் பெற்றான். அர்ஜுனனிடம் வில் வித்தையைக் கற்றான். பலராமரின் உதவி கொண்டு துரியோதனனின் மகள் லக்ஷ்மணாவை மணம் புரிந்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை என்றால், இவன் அதற்கு முற்றிலும் முரணானவன். அவன் செய்த அடாத செயல்களுக்கும், அட்டகாசங்களுக்கும் அளவே இல்லை. ஸ்ரீ கிருஷ்ணரின் விளையாட்டுகளால் நற்பலனே விளைந்தன என்றால், சாம்பனின் செயல்களால் பிறருக்குத் தீமையே ஏற்பட்டன. கிருஷ்ண பகவானாலேயே அவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், என்னவென்பது? கடும் தண்டனை கொடுத்தால் திருந்துவான் என்று முடிவு செய்தவர், அவன் பெருநோயால் அவதியுறச் சாபமிட்டு விட்டார்.

புத்திரப் பாசத்தால் தாய், கணவரிடம் கெஞ்ச, தனயன் தந்தையிடம் மன்னிக்கக் கோரி மன்றாட, கிருஷ்ணர் மனமிரங்கி, ‘ஆதவனை பன்னிரெண்டு ஆண்டுகள் உபாசனை செய்து தவமிருந்தால் நோயிலிருந்து மீளலாம்’ என சாப விமோசன வரமளித்தார்.

சாம்பனும் அதற்கிணங்க, தற்போது கொனார்க் சூரியன் கோயில் அமைந்துள்ள பிரதேசத்துக்கு அருகில் ஓடும் சந்திரபாகா நதிக்கரையில் தவமியற்றி, மகர மாத சுக்லபட்ச தசமி திதி அன்று நோயிலிருந்து மீண்டான் என்பது வரலாறு.

ப்போது ஒரு சமயம் நதியில் நீராடுகையில் அவன் கைகளில் ஓர் அற்புதமான ஆதவனின் சிலை தட்டுப்பட, அதை அருகிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். பின்னாளில் அதுவே, தற்போதைய கொனார்க் ஆலயத்துக்கு முன்னோடியாக அமைந்துவிட்டது என்பது வரலாற்றுச் செய்தியாகும். இதன் காரணமாகவே இவ்விழா ஒடிஷா மாநிலத்தில் சூரிய வழிபாடாக அனுசரிக்கப்படுகிறது.

விழா நாளன்று தாய்மார்கள் தங்களது குழந்தைகள் நோய், நொடியின்றி நீண்ட காலம் உயிர் வாழ சூரியனார் கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர். சூரிய உதயமாகையில் அவனுக்குப் பல்சுவை உணவு வகைகளைப் படைத்து ஆராதிக்கின்றனர். இதில் ஒரு விநோத வழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரால் இப்பலகாரங்கள் ஆதவனுக்கு அர்ப்பணிக்கப்படும். பின்னர் நண்பகலில் திறந்தவெளியில் கூம்பு வடிவில் கோயில் போல் அமைத்து அதன் மேல் துளசி செடியைப் படர விடுவர். அதன் முன் படையல் வைக்கப்படும். இந்த ஐந்து கரும்புகள் பஞ்சபூதங்களைக் குறிக்கும். தட்டில் ஆரத்தி கரைத்து அதன் மத்தியில் மங்கலகரமானதும், மருத்துவக் குணங்கள் நிறைந்த வெற்றிலையை அமிழ்த்தி வைப்பார்கள். சூரிய பிம்பம் அதில் விழ, அனைத்து தாய்மார்களும் வணங்கி ஆராதிப்பர்.

சாம்பா தசமி விரத மகிமையை விளக்கும் கதையைப் பாராயணம் செய்வர். தங்கள் குழந்தைகள் சாம்பனை போல் அடாவடித்தனம் செய்யாமல், நற்குணங்கள் உள்ளவர்களாக, குடும்பம் முன்னேற உறுதுணையாக இருந்து வளர வேண்டுவர். அந்தி

சாயும் வேளையில், ‘மகா கால’ பூஜை என்ற யமதர்ம ராஜனை வழிபடும்விதமாக, ‘யம பலி’ எனும் அறுசுவைப் படையலை வைத்து, ஆராதித்து விரதத்தை முடித்துக்கொள்வர்.

ஸ்ரீ கிருஷ்ணர், அவருடைய மகன் சாம்பன், நோய்நொடி தீர்க்கும் சூரியன் ஆகியோரை வழிபடும் சாம்பா தசமி விரதம் ஒடிஷா மாநிலத்துக்கே உரிய தனிப்பெரும் பாரம்பரியமிக்க பண்டிகையாக விளங்குகிறது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மலை தாங்கி குடையாக்கினாய்!

- மாலதி சந்திரசேகரன் துவாரகாதீசனான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு. உகந்த துவாரகை ஸ்தலங்கள் ஒன்பது ஆகும். ‘மோட்சபுரி’ என்று கூறப்படும் துவாரகா, பேட் துவாரகா, டாக்கூர் துவாரகா, ஸ்ரீநாத் துவாரகா, காங்கரோலி துவாரகா, ருக்மணி...

ஆடி அதிசய விழாக்கள்!

0
- டி.எம்.இரத்தினவேல் ஆடி மாதம் - தமிழர்களின் வாழ்வோடு கலந்தது. சமயம், சமுதாயம், பண்பாடு எனப் பல கோணங்களிலும் தமிழர்தம் ஒரு பகுதியாக மாறிவிட்ட இம்மாதம், கடவுளை வழிபடுவதற்கு மிக உகந்ததாகும். உழைப்பை ஆராதிக்கும்...

ஒற்றுமையை பலப்படுத்தும் ஸ்வர்ணகௌரி விரதம்!

- கோ.காந்திமதி ஒவ்வொரு தமிழ் வருடமும் ஆடி மாதம் சுக்லபட்சம் திரிதியை தினத்தன்று ஸ்வர்ணகௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஜாதகத்தில் சுக்ர பகவானின் பலம் குன்றி இருந்தாலோ அல்லது சுக்ரன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ...

ஆனி திருமஞ்சனமும்; ஆடி அமாவாசை வழிபாடும்!

- மாலதி சந்திரசேகரன் ‘கோயில்’ எனும் வார்த்தை பொதுவாக இரண்டு கோயில்களையே குறிக்கும். ஒன்று, வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம்; மற்றது, சைவர்களுக்கு ஸ்ரீ நடராஜப் பெருமான் அருள்பாலிக்கும் சிதம்பரம் ஆகும். கயிலையங்கிரியில், சிவபெருமான் ஆடிய தாண்டவத்தைக் காண...

அட்சய திருதியையில் அருளும் அதிசய மகாலட்சுமி!

0
- அபர்ணா சுப்ரமணியம் அள்ள அள்ள குறைவின்றித் தருவது அட்சய திருதியையின் சிறப்பு. அதனால்தான் அன்றைய தினம் தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், அன்றைய தினம் செல்வத்திற்கு அதிபதியான...