சாட்டிலைட் உதவியுடன் ரிலையன்ஸ் ஜியோ சேவை: லக்சம்பர்க் நிறுவனத்துடன் கூட்டு!

சாட்டிலைட் உதவியுடன் ரிலையன்ஸ் ஜியோ சேவை: லக்சம்பர்க் நிறுவனத்துடன் கூட்டு!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சேட்டிலைட் உதவியுடன் கூடிய பிராட்பேண்டு சேவைகளை இந்தியாவில் வழங்க, லக்ஸம்பர்க்கை சேர்ந்த எஸ்.இ.எஸ்., நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அறிவித்துஉள்ளது.

இந்த முயற்சி குறித்து, இரு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;

ரிலையன்ஸ் ஜிஒ மற்றும் எஸ்.இ.எஸ்  ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, கூட்டாக, ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய நிறுவனத்தில், ஜியோ வசம் 51 சதவீத பங்குகளும்; எஸ்.இ.எஸ்., வசம் 49 சதவீத பங்குகளும் இருக்கும்ம்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஜியோ நிறுவனத்தின் இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது:

'பைபர்' அடிப்படையிலான சேவைகள் மற்றும் '5ஜி' ஆகியவற்றை தொடர்ந்து, அடுத்து, இந்த புதிய சேவையையும் வழங்க இருக்கிறோம். எஸ்.இ.எஸ்., உடனான கூட்டு முயற்சியின் வாயிலாக, பிராட்பேண்டு சேவை மேலும் வளர்ச்சியுறு என்று நம்புகிறோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com