சத்ய சாய்பாபாவின் 96-வது பிறந்த நாள் விழா: புட்டபர்த்தியில் இன்று கோலாகல விழா!

சத்ய சாய்பாபாவின் 96-வது பிறந்த நாள் விழா: புட்டபர்த்தியில் இன்று கோலாகல விழா!

இன்று சத்ய சாய்பாபாவின் 96-வது பிறந்த நாளையொட்டி புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகல விழா கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து பிரசாந்தி நிலையத்திலிருந்து தெரிவிக்கப் பட்டதாவது:

ஶ்ரீசத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பாரம்பரிய ரத்தோத்ஸவம் திருவிழா மற்றும் ஸ்ரீ சத்ய சாய் சத்தியநாராயண பூஜை ஆகியவை இன்று பிரசாந்தி நிலையத்தில் நடைபெறுகிறது. இவற்றை பிரசாந்தி நிலையத்தின் யூ டியூப் சேனல் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் காணலாம்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

1926, நவம்பர் 23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கடப்ப ராஜு ஈஸ்வரம்மா தம்பதியரின் மகனாக சத்ய சாய்பாபா பிறந்தார். அவர் 1950-ம் வருடம் நவம்பர் 23-ம் தேதி புட்டபர்த்தியில் 'பிரசாந்தி நிலையம்' என்ற பிரமாண்ட ஆசிரமம் கட்டி சாய்பாபா தனது 28வது பிறந்த நாளில் திறந்து வைத்தார். ஆந்திராவின் ராயலசீமாவில் மெகா குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார். இன்னும் இலவச மருத்துவமனை, கல்லூரிகள் உடபட பலவற்றை நிறுவினார். ஶ்ரீசத்ய சாய்பாபா 2011-ம் வருடம் ஏப்ரல் 24-ம் தேதி காலை 6.25 மணியளவில் ஸித்தியடைந்தார். அதையடுத்து புட்டபர்த்தியில் உள்ள யஜுர் ஆசிரமத்தில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com