$500 மில்லியன் கொடுக்க மறுக்கும் ட்விட்டர், வழக்கு தொடுத்த முன்னாள் ஊழியர். 

elan musk
elan musk
Published on

ட்விட்டரில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய $500 மில்லியன் பணி நீக்க போனஸை நிறுவனம் வழங்க மறுப்பதாக  முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். 

கடந்த ஆண்டு அக்டோபரில் Twitter நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய பிறகு அதன் செலவைக் குறைப்பதற்காக பல நடவடிக்கையை மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக பணியாளர்களை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரையும் பணிநீக்கம் செய்தார். ஆட்குறைப்பு குறித்து முன்கூட்டியே எவ்வித அறிவிப்பும் தரவில்லை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. 

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து அந்நிறுவனத்திற்கு எதிராக இரண்டாவது முறையாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  அதாவது ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் $500 மில்லியன் டாலர்கள் பணி நீக்க போனசாக தரவேண்டியுள்ளது என ட்விட்டரில் பணிபுரிந்த மூத்த பொறியாளர் கிரிஸ் உட்ஃபீல்ட்  என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சியாட்டில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த உட்பீல்ட், ட்விட்டர் நிறுவனம் தன் ஊழியர்களை இடையில் பணி நீக்கம் செய்ததால் அவர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு மாத பணி நீக்க போனஸை யாரும் பெறவில்லை என்று கூறுகிறார். ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு மிகப்பெரிய மோசடி செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தில் ஆரம்ப கட்டணமாக ரூபாய் 500 மில்லியன் டாலரை உடனடியாக ட்விட்டர் நிறுவனம் செலுத்த வேண்டும் என தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். பணியாட்களை பாரபட்சம் பார்க்காமல் வெளியேற்றிய ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக ஏற்கனவே நடுவர் மன்றத்தை நாடி இருக்கிறார். ஆனால் அந்த வழக்கிற்கு ட்விட்டர் நிறுவனம் எவ்வித கருத்தும் கூறாமல் கட்டணத்தை செலுத்த மறுத்துவிட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நூற்றுக்கணக்கான முன்னாள் ஊழியர்கள் இந்தக் கோரிக்கையை ட்விட்டர் நிறுவனத்திடம் முன் வைத்தனர். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அவர்களுக்கு முறையாக பதில் அளிக்கவில்லை. 

இடையில் பணி நீக்கம் செய்யும் ஊழியர்களுக்கு பணி நீக்க போனஸ் வழங்குவது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு முன்பே இருந்த திட்டமாகும். அதை எலான் மஸ்க் மீறிவிட்டதாக பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com