

சூரிய குடும்பத்தில் உள்ள சூரியனின் நீள் வட்ட பாதையில் சுற்றி வரும் முக்கிய கோள்களைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
புதன் வெள்ளி பூமி செவ்வாய் வியாழன் சனி யுரேனஸ் நெப்டியூன் இவை பாறைகளால் ஆன உட்கோள்கள் மற்றும் வாய்வுகளால் ஆன வெளிகோள்கள் என இருவகைப்படும். வியாழன் மிகப்பெரிய கோள் புதன். மிகச்சிறியது வெள்ளி. வெப்பமானது சூரிய ஒளி மூலம் கோள்கள் பிரகாசிக்கின்றன.
புதன் வெள்ளி பூமி செவ்வாய் ஆகியவை திடமான மேற்பரப்பை கொண்டவை. வியாழன் சனி யுரேனஸ் ஆகியவை வாயு பந்துக்கள்.
புதன் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகமாகும். பகலில் அதிக வெப்பமும் இரவில் அதிக குளிர் கொண்டது. வெள்ளி அதிக வெப்பமான கோள். காலை விண்மீன்கள் மாலை விண்மீன்கள் என அழைக்கப்படுகிறது. பூமி உயிர் வாழ தகுதியுடைய கிரகமாகும். இது நீல நிற கோள் எனவும் அழைக்கப்படுகிறது.
செவ்வாய் சிறப்பு நிறக்கோள் இதில் இரும்பு ஆக்சைடு அதிக அளவில் உள்ளது வியாழன் மிகப்பெரிய கிரகம் இதில் 67 துணைக்கோள்கள் உள்ளன. சனி அதிக வளைவுகளைக் கொண்டது. நெப்டியூன் சூரியனிலிருந்து அதிக தொலைவில் உள்ளது.
இனி கிரகங்களை பற்றி பார்க்கலாம்:
புதன்
சூரியனின் மிக அருகில் உள்ள கிரகம் சூரியனைவிட வேகமாக வளரும் கோள். இதற்கு துணைக்கோள்கள் இல்லை. தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 59 நாட்கள். சூரியனை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நாட்கள் 88 நாட்கள்.
வெள்ளி
பூமிக்கு அருகில் உள்ள கிரகம் புவியின் இரட்டைப் பிறவி என அழைக்கப்படுகிறது. மிகவும் வெப்பமானது. தன்னைத்தானே மெதுவாக சுற்றிக் கொள்ளும். தன்னைத்தானே சுற்றிவர 243 நாட்கள் எடுத்துக்கொள்கிறது சூரியனை சுற்றிவர 224 நாட்களாகும்.
பூமி
உயிர்கலம் என அழைக்கப்படுகிறது. ஒரே ஒரு துணைக்கோள் கொண்டது. 23 டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனை சுற்றுகிறது. தன்னைத்தானே சுற்றிவர 23 மணி 56 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
செவ்வாய்
சிவப்பு கோள் என அழைக்கப்படுகிறது. இரண்டு துணைக்கோள்கள் கொண்டது. தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் 37 நிமிடங்கள் ஆகிறது. சூரியனை சுற்றிவர 687 நாட்கள் ஆகும்.
வியாழன்
மிகப்பெரிய கோள் ஆகும். இதில் 67 துணை கோள்கள் உள்ளன. மிகப்பெரிய துணைக்கோள் கனிமட் எனப்படும் தன்னைத்தானே சுற்றிவர 9 மணி 55 நிமிடம் ஆகும். சூரியனை சுற்றிவர 11 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகும்.
சனி
அதிக துணைக்கோள்கள் கொண்டது. கிட்டத்தட்ட 60 துணை கோள்கள் உள்ளது. இதனை கண்டுபிடித்தவர் கலீலியோ அழகிய வளையங்களைக்கொண்ட மஞ்சள் நிற கிரகம் தன்னைத்தானே சுற்றிவர பத்து மணி 40 நிமிடம் ஆகும். சூரியனைச் சுற்றிவர 29 ஆண்டுகள் 5 மாதம் ஆகிறது. ஒரு கற்பனையாக இந்த கிரகத்தை பறித்துக்கொண்டு வந்து கடலில் மிதக்கவிட்டால் தெப்பம் போன்று மிதக்கும் இந்த சனிக்கிரகம்.
யுரேனஸ்
இந்த கிரகத்தை கண்டுபிடித்தவர் வில்லியம் ஏர்செல். 27 துணை கோள்கள் உள்ளன. 98 டிகிரி சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது இது ஒரு பச்சை நிறகோள். தன்னைத்தானே சுற்றிவர 17 மணி நேரம் ஆகும். சூரியனை சுற்றிவர 84 ஆண்டுகள் ஆகும
நெப்டியூன்
இதனை கண்டுபிடித்தவர் கேலி என்ற விஞ்ஞானி ஆவார். 13 துணை கோள்கள் உள்ளன. தன்னைத்தானே சுற்றிவர 16 மணிநேரம் ஆகும். சூரியனை சுற்றிவர 164 ஆண்டுகள் ஆகும்.
கிரகங்கள் பற்றிய முக்கிய தகவல்கள்:
பிளானட் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது. பிளானட் என்றால் அலைந்து திரிபவன் என்று பொருள்.
சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. புதன் வெள்ளி பூமி செவ்வாய் ஆகியவை உட்கோள்கள் எனப்படுகிறது. வியாழன் சனி யுரேனஸ் நெப்டியூன் ஆகியவை வெளி கோள்கள். இதற்கு வாயு கோள் என்றும் பெயர்.
மிகப்பெரிய கிரகம் வியாழன். மிகச்சிறிய கிரகம் புதன் சூரியனின் அருகில் புதன் உள்ளது. சூரியனின் தொலைவில் நெப்டியூன் உள்ளது. மிகவும் வெப்பமான கிரகம் வெள்ளி. மிகவும் குளிர்ச்சியான கிரகம் நெப்டியூன் துணைக்கோள்கள் இல்லாதது புதன் வெள்ளி கிரகம் ஆகும்.
வியாழன் தன்னைத்தானே வேகமாக சுற்றிக்கொள்ளும். வெள்ளி கிரகம் தன்னைத்தானே மெதுவாக சுற்றிக் கொள்ளும். ரெண்டு டிகிரி சாய்ந்து சுற்றுவது வியாழன் 23 டிகிரி சாய்ந்து சுற்றுவது பூமி 98 டிகிரி சாய்ந்து சுற்றுவது யுரேனஸ் வெள்ளி கிரகம் கிழக்கிலிருந்து மேற்காக சுற்றி வருகிறது.
கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொள்வது ரொட்டேஷன் எனப்படும் கிரகங்கள் சூரியனை சுற்றி வலம் வருவது ரெவல்யூஷன் எனப்படும். இந்த செயல்கள் பிரபஞ்சத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.