ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் பயணிக்கும் விமானத்தை சந்தையில் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா என நாசா ஆய்வு செய்து வருகிறது.
விஞ்ஞான உலகம் எப்போதுமே நம்மை வியக்க வைக்கத் தயங்கியதில்லை. புதிய புதிய கண்டுபிடிப்புகள் நம்மை தினசரி ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரு காலத்தில் இதெல்லாம் நடக்க சாத்தியமில்லை என நாம் நினைத்த பல விஷயங்கள் தற்போது நடந்து வருகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக சந்திரயான் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வைக் கூறலாம்.
இந்நிலையில் அடுத்த ஆச்சரியம் அளிக்கக்கூடிய செய்தியை வெளியிட்டு, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மக்களை திக்குமுக்காடச் செய்துள்ளது. அதாவது ஒலியை விட நான்கு மடங்கு வேகத்தில் பயணிக்கும் விமானத்தை நாசா ஆய்வு செய்து வருகிறது. இது வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்த ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட நாசா, ஒரு பொருள் ஒலியின் வேகத்தில் பயணித்தால் அதை மேக் 1 எனக் கூறுவோம். அதைவிட குறைவான வேகத்தில் ஒரு பொருள் பயணித்தால் அதை மேக் 2 மற்றும் மேக் 4 என அதன் வேகத்தைப் பொறுத்து அளவிடுவோம். மேக் 2 மற்றும் மேக் 4 வேகத்தில் பயணிக்கும் ஜெட் விமானங்கள் குறித்த தகவல்களை நாசா வெளியிட்டுள்ளனர். இதன் வேகம் தற்போது பயன்படுத்தப்படும் விமானங்களை காட்டிலும் ஐந்து மடங்கு அதிக வேகமாகும். அதாவது மணிக்கு 600 மில் வேகத்தில் இந்த விமானம் இயக்கப்படும்.
இந்த விமானங்கள் முறையாக மக்களின் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு வெறும் ஒன்றரை மணி நேரத்தில் பயணிக்கலாம். வானியல் கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி தொடர்பான செய்திகளை வெளியிடும் ஸ்பேஸ் இணையதளம், இந்த அதிவேக விமானம் குறித்து கூறுகையில், இந்த விமானங்கள் Quess T என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படும்.
இவை ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் இயக்கப்படும்போது, அதிக சத்தம் கேட்கும். இந்த சத்தத்தைக் குறைக்கவே இத்தகைய விமானங்களில் Quess T என்ற தொழில்நுட்பத்தை நாசா பயன்படுத்தவுள்ளது. எப்படி நிறுத்தலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகளை நாசா ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்காவில் சூப்பர் சோனிக் எனப்படும் அதிவேக விமானங்களை இயக்குவதற்கு தடை இருப்பதால், இதன் சோதனை ஓட்டத்தை பசிபிக் அல்லது வடக்கு அட்லாண்டிக் போன்ற கடல் பகுதியில் நடத்த நாசா திட்டமிட்டு வருகிறது.